டக்ளஸ் சி. நார்த் (Douglass C.North) நவம்பர் 5, 1920இல் பிறந்து நவம்பர் 23, 2015இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். பொருளாதார வரலாற்றில் நிறுவனங்களின் பங்கு பற்றிய ஆய்வுக்காக ராபர்ட் டபிள்யூ. ஃபோகலுடன் சேர்ந்து 1993ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். சட்டங்கள், சொத்துரிமைகள், அரசியல், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கை அமைப்புகள் உள்ளிட்ட குழுவின், விதிமுறைகள் மற்றும் மரபுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சமூக நிறுவனங்கள், பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் புதிய நிறுவன பொருளாதாரத்தின் (Institution Economics) அடித்தளமிட்டவர்களில் டக்ளஸ் நார்த்தும் ஒருவர்.
அவரது முதல் புத்தகம் (1961) Quantitative Economic History, என்பது பொருளாதாரத்திற்கு டக்ளஸ் சி. நார்தின் முதல் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாகும். புவியியலின் சிறப்பு மற்றும் உழைப்புப் பிரிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கான புதிய-தொன்மை பொருளாதாரக் கோட்பாட்டை இந்தப் புத்தகம் முன்வைத்தது, மேலும் இது 19ஆம் நூற்றாண்டில் போக்குவரத்து செலவுகள் வீழ்ச்சியடைவதற்கான ஆதாரங்களை ஆராய அவரை வழிநடத்தியது.
1970கள் முழுவதும், பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுக்கும் நிறுவனங்கள், சொத்துரிமைகள் மிக முக்கியமானவை என்பதை நிரூபிக்கும் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை டக்ளஸ் நார்த் வெளியிட்டார். இந்த வகையான ஆய்வுத் துறையினை The New Institutional Economic (புதிய நிறுவன பொருளாதாரம்) என்று அழைக்கப்பட்டது. செயல்படாத நிறுவனங்கள், குறிப்பாக சட்ட விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பது, நீதித்துறையில் தன் கடமையைச் சரியாக பின்பற்றாமல் இருப்பது, ஒப்பந்தங்கள் மற்றும் சொத்துரிமையினை நிறைவேற்றாமல் இருப்பது போன்றவற்றால் சமூகம் சரியாக செயல்படாமல் இருக்கும் என டக்ளஸ் நார்த் வாதிடுகிறார். இவ்வாறு நிகழும்போது, இந்த நிறுவனங்களைச் சீர்திருத்தத்திற்குத் தேவையான கூட்டமைப்பை உருவாக்குவது பெரும்பாலும் மிகவும் கடினம் என்கிறார் டக்ளஸ் நார்த்.
பொருளாதார வரலாறு, மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் தொன்மைப் பொருளாதாரக் கோட்பாட்டின் மீதான அவரது விமர்சனம் முதன்மையானதும் கவனிக்கத்தக்கதும் ஆகும். 1990ஆம் ஆண்டு தனது Institutions, Institutional Change என்ற புத்தகத்தை எழுதிய டக்ளஸ் நார்த், ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மனித நடத்தைக்கு நிலைத்தன்மை மற்றும் முன்கணிப்புத்தன்மையை வழங்குவதாகும் என்பதை வலியுறுத்துகிறார். டக்ளஸ் நார்த், பாரம்பரிய பொருளாதார வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறார், அவர் தொன்மை பொருளாதாரக் கோட்பாடுகளை நேரடியாக வரலாற்றின் வழியாக வெளிக் கொணர்ந்தார், இதனை புதிய பொருளாதார வரலாறு என்று அழைக்கப்படுகிறது.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.investopedia.com; www.cepr.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

