நுகர்வோரே Nugarvore poem

உலக மக்களே உங்களிடம் ஒரு கேள்வி?
நீங்கள் எல்லாம் யார்??
சிலர் மனிதர் என்பார்!!
சிலர் நல்லவர் என்பார்!!
நான் சொல்கிறேன் நாமெல்லாம் நுகர்வோர்!!!
அனைத்தையும் நுகர்ந்தோம்;
நோயை நுகர்ந்தோம்;
துன்பத்தை நுகர்ந்தோம்,
நுகர்ந்தோம் நுகர்ந்தோம்..
நுகர்ந்து கொண்டே இருந்தோம்!!!
முடிவு ஒரு சிலர் இறக்ககூட நேர்ந்தனர்
வேண்டும் நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும்….
கலப்படம் வேண்டாம்; இலவசம் வேண்டாம்
ஏமாற்றுபவனைவிட ஏமாறுகிறவன் தான் உணர வேண்டும்;
மனிதனே உன் உயிரைப் பிறருக்குத்
தவணை முறையில் தந்து விடாதே!!
சிந்தியுங்கள் சிந்தியுங்கள்..
ஒரு நாள் மயக்கம் ஏற்பட்டு
மறுநாள் தயக்கம் துளிர் விட்டு;
இறுதியில் துக்கம் அடைவதை விட
ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்…

 

எழுதியவர் 

 ரசிகா

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *