தினம் தினம் தற்கோலை
செய்து கொள்கிறேன்.
விடியலில் எப்போதும் போல
சன்னலைத் திறந்து வைக்கிறேன்.
அழைப்பு மணியோசையில்
மனம் தடுமாறுகிறது.
நைலான் கயிறுகள் பல வண்ணத்தில்
பரிசாக வந்திருக்கின்றன.
கனவுகளின் பாரத்தைச் சுமக்கும்
உறுதியானவை.
அறிவுஜீவிகளின் சிபாரிசுகள்
பொறிக்கப்பட்ட முத்திரை
கவனமாகப் பொதியப்பட்டு
அதில் பளிச்சென என் பெயருடன்
வந்திருக்கும் பெட்டியை
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.
பகல் வெளிச்சத்தில்
சுருண்டுக்கிடக்கும் கயிறுகள் தற்கொலைக்குத் தூண்டுகின்றன
இரவு வரும்போது
மீண்டும் தூக்குமாட்டிக்கொள்கிறேன்.
கவிதைகள் நாக்கை நீட்டிக்கொண்டு பரிதாபமாக வெளியில் தள்ளப்படுகின்றன.
எழுதி முடிக்காத நாவலின் கடைசி
அத்தியாயத்தில்
அவனைச் செரிக்க முடியாமல்
வயிறு உப்பி குடல் வெளியில்
தள்ளியதில்
நாற்றமெடுக்கிறது பிணம்.
————————————
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.