அக்டோபர் 01 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இஷர் ஜட்ஜ் அலுவாலியா & திமோதி ஜே. பார்டிக் (Economist Isher Judge Ahluwalia & Timothy J. Bartik Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 01 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இஷர் ஜட்ஜ் அலுவாலியா & திமோதி ஜே. பார்டிக் – முனைவர் பு. அன்பழகன்

இஷர் ஜட்ஜ் அலுவாலியா (Isher Judge Ahluwalia) அக்டோபர் 1, 1926இல் பிறந்து செப்டம்பர் 26, 2020இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர், டெல்லி பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர், புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞரான பால் சாமுவேல்சன் அவர்களின் வழிகாட்டுதலில் பொருளாதாரத்திற்கான முனைவர் பட்டம் பெற்றார். அவர், தொழில் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். வாஷிங்டனில் உள்ள பன்னாட்டுப் பண நிதியத்தில் (IMF) பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

இஷர் அலுவாலியா இந்தியாவின் முன்னணி கொள்கை பொருளாதார நிபுணர்களில் ஒருவர், தொழில் சார்புடைய பெண்களுக்கான ஒரு சிறந்த பிரதிநிதியாக்க காணப்பட்டார், நிறுவனங்களை உருவாக்குபவர், நம்பிக்கை கொண்ட பெண், தேசபக்தர் மற்றும் துணிச்சலான நபர் என பன்முகத் தன்மைகொண்டவர் ஆவார். 1990களின் முற்பகுதியில் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலுக்கான சார்பான வாதத்தை முன்வைத்தவரை்களில் ஒருவர். 2009இல் இந்தியாவின் உயர்ந்த தேசிய விருதான பத்ம பூஷண விருது பெற்றார்.

இஷர் அலுவாலியா, பொதுக் கொள்கை, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிலையான நகரமயமாக்கல் ஆகியவற்றில் அவரது பணிகள் விரிவடைந்தன. அவர் தனது கணவரும் முன்னாள் திட்டக குழுவின் துணைத் தலைவருமான மான்டெக் சிங் அலுவாலியாவுடன் சேர்ந்து பல்வேறு பொருளாதார முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

இஷர் அலுவாலியா 2003-2006இல் International Food Policy Research Institute (IFPRI) அமைக்கப்பட்ட குழுவினை தலைமை ஏற்றுச் செயல்பட்டார், 2008ஆம் ஆண்டில் Urban Infrastructure and Services தொடர்பான அரசாங்கக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இது புறக்கணிக்கப்பட்ட நகரமயமாக்கலில் கவனம் செலுத்த வழிவகுத்தது. Asian Development Bank, ASEAN போன்ற அமைப்புகளிலும் நிபுணராகச் செயல்பட்டார். இந்தியப் பெண்களுக்கான எல்லைகள் குறைவாக இருந்த நேரத்தில் அவர் தனது கல்வியைப் பெற்று தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது அவரது சாதனைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. பத்து மாதங்களாக மூளை புற்றுநோயுடன் போராடி இஷர் செப்டம்பர் 26, 2020 அன்று மறைந்தார்.

ஆதாரம்: www.ft.com; www.medium.com

*******************************

2. திமோதி ஜே. பார்டிக் (Timothy J. Bartik) மார்ச் 26, 1954இல் பிறந்த பிராந்திய (regional) பொருளாதாரம், பொது நிதி, நகர்ப்புற பொருளாதாரம், தொழிலாளர் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் தேவை கொள்கைகளில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர். பார்டிக்கின் ஆராய்ச்சி மாநில, உள்ளாட்சி பொருளாதார மேம்பாடு மற்றும் உள்ளூர் தொழிலாளர் சந்தைகளில் கவனம் செலுத்துகிறது. அவரது ஆய்வானது, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மதிப்பிடுதல், குழந்தைப் பருவத் திட்டங்களில் முதலீடு உள்ளூர் பொருளாதாரங்களை எவ்வாறு பாதிக்கிறது, உள்ளூர் பொருளாதார மேம்பாட்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்குத் தொழிலாளர் தேவையை அதிகரிப்பதற்கான மாற்றுக் கொள்கைகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.

பார்டிக் உள்ளூர் வாசிகளின் வருமானத்திற்கான ஊக்கத்தொகைகளின் நன்மைகள் மற்றும் செலவுகளை ஆராயவும், ஊக்கத்தொகை வடிவமைப்பு, உள்ளூர் பொருளாதார நிலைமைகள் மற்றும் ஊக்கத்தொகை நிதிநிலை செலவுகளின் ஒதுக்கீடு ஆகியவற்றுடன் சலுகைகள் மற்றும் செலவுகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பகுப்பாய்வு செய்யவும் ஒரு உருவகப்படுத்துதல் மாதிரியை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: www.penniur.upenn.edu; www.hceconomics.uchicago.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *