ஜேம்ஸ் எம். புக்கனன் (James M. Buchanan) அக்டோபர் 3, 1919இல் பிறந்து ஜனவரி 9, 2013இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். பொருளாதார மற்றும் அரசியலில் முடிவுகளை மேற்கொள்வதற்கான தனித்துவம் வாய்ந்த பொதுத் தேர்வுக் கோட்பாட்டினை (public-choice theory) உருவாக்கியதற்காக 1986ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
பொதுத் தேர்வுக் கோட்பாடானது, மக்கள் நலன் சார்பான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசியல் சார்பான முடிவுகளை எடுப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு உதவி செய்கிறது. ஊக்கத்தொகைகள் மற்றும் தனிப்பட்ட ஆதாயம் ஆகியவை அரசியல்வாதிகளின் முடிவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இது ஆராய்கிறது. மனித இயல்பு மற்றும் அரசியல் விளைவுகள் பற்றிய புக்கனனின் கோட்பாடானது, அரசியல்வாதிகளை ஊக்குவிக்குவித்தலைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகின்றன, மேலும் இது அரசியல் முடிவுகளை மிகவும் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது.
பொதுத் தேர்வின் இரண்டு நிலைகளை அவர் வேறுபடுத்துகிறார் ஒன்று, அரசியலமைப்பு தேர்ந்தெடுக்கப்படும் தொடக்க நிலை இரண்டு, அரசியலமைப்பிற்குப் பிந்தைய நிலையாகும். முதலாவது ஒரு ஆட்ட விதிகளை (Game rule) வடிவமைத்தல், இரண்டாவது விதிகளுக்குள் ஆட்டத்தை விளையாடுவதாகும். புக்கனன் தனது சக பொருளாதார வல்லுநர்களை இரண்டாவது நிலையில் அரசியல் வீரர்களாகச் செயல்படுவதற்குப் பதிலாக முதல் நிலை பற்றி அதிகம் சிந்திக்கச் செய்துள்ளார். இந்த சிந்தனை முறையைப் பரப்ப, புக்கனன் Constitutional Economics என்ற புதிய இதழைத் தொடங்கினார்.
பொதுவாக, பொதுவில் உள்ள நபர்களின் நடத்தை, குறிப்பாக, வாக்காளர்கள், பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் முகவர்கள் போன்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது இதன் அடிப்படையாகும். ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தேர்வு மையம், புரட்சிகரமான பொருளாதார மற்றும் அரசியல் அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. வாக்காளர்கள், வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளின் நடத்தையைப் பகுப்பாய்வு செய்ய பொதுத் தேர்வு பொருளாதாரத்தின் கருவிகளை விரிவுபடுத்துகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
(1962): The Calculus of Consent: Logical Foundations of Constitutional Democracy
(1968): The Demand and Supply of Public Goods
(1969): Cost and Choice: An Inquiry in Economic Theory
(1975): The Limits of Liberty: Between Anarchy and Leviathan
(1977): Freedom and Constitutional Contract
(1980): The Power to Tax: Analytical Foundations of a Fiscal Constutions
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.investopedia.com; www.neh.gov; www.nobelprize.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

