அக்டோபர் 04 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லேலண்ட் பென்னட் யேகர் (Economist Leland Bennett Yeager Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லேலண்ட் பென்னட் யேகர் – முனைவர் பு. அன்பழகன்

லேலண்ட் பென்னட் யேகர் (Leland Bennett Yeager) அக்டோபர் 4, 1924இல் பிறந்து ஏப்ரல் 23, 2018இல் மறைந்த பணவியல் கொள்கை மற்றும் பன்னாட்டு வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். யேகர் ஒரு தொன்மைவாத தாராள நிலைக்கு ஆதரவான கருத்துடையவர். யேகர், பொதுவாகக் கட்டுப்பாடற்ற சந்தைகள் மற்றும் சுதந்திரத்தை ஆதரித்தார். அவரது ஆய்வானது குறுகிய வரையறுக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு அப்பால், நெறிமுறைகள் மற்றும் சமூக தத்துவம் வரை விரிவடைந்துள்ளது.

யேகர், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொது சமநிலைக் கோட்பாட்டைக் கற்பித்தபோது, கோட்பாட்டின் அத்தியாவசியங்களை வெளிப்படுத்தக் கணக்கீட்டு விவாதத்தைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பொதுத் தேர்வு மற்றும் வர்ஜீனியா பள்ளி அரசியல் பொருளாதாரத்தின் கட்டமைப்பாராகவும் இருந்தார்.

யேகர், 1954இல் The Methodology of Henry George and Carl Menger என்ற புத்தகத்தையும், 1962ஆம் ஆண்டில், In Search of a Monetary Constitution என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டார். பொருளாதார அமைப்பின் செயல்பாட்டிற்குப் பணம் மிகவும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யேகர் வாதிடுகிறார். பணத்தினைத் தவிற்று, மக்கள் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அவற்றை மற்றவர்களிடம் சிறப்பு உற்பதியாக்காக பரிமாற்றம் செய்கின்றனர் என்கிறார்.

யேகர், எந்தவொரு குறிப்பிட்ட உற்பத்தியும் தேவையினை உருவாக்குகிறது என்கிறார். அந்த வகையில் அளிப்பானது தேவையை உருவாக்குவதால், பொதுவான தேவையில் ஏற்படும் பற்றாக்குறையினால் பரிமாற்றத்திற்குத் தடையாக உள்ளது என்கிறார். இது பரிமாற்றம் செய்யப்பட வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துகிறது. யேகர் பணவியலின் சமநிலையின்மையின் நிறுவனரில் ஒருவராகக் கருதப்படுகிறார்

ஆதாரம்: www.blog.independent.org; www.cato.org; www.api.pageplace.de; www.marketmonetarist.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *