அக்டோபர் 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெய்ன்ஹார்ட் செல்டன் (Economist Reinhard Selten Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரெய்ன்ஹார்ட் செல்டன் – முனைவர் பு. அன்பழகன்

ரெய்ன்ஹார்ட் செல்டன் (Reinhard Selten) அக்டோபர் 5, 1930இல் பிறந்து ஆகஸ்ட் 23, 2016இல் மறைந்த ஜெர்மன் கணிதவியலாளர் ஆவார். பல்வேறு சிந்தனைகளைக் கொண்ட போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டிகளை ஆராயும் கணிதத்தின் ஒரு பிரிவான ஆட்டக் கோட்பாட்டை (Game theory) உருவாக்கியதற்காக ஜான் எஃப். நாஷ் மற்றும் ஜான் சி. ஹர்சானி ஆகியோருடன் சேர்ந்து 1994ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றார். பொருளாதாரத்தில் நோபல் பரிசைப் பெற்ற ஒரே ஜெர்மானியர் ரெய்ன்ஹார்ட் செல்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்டன் நெறிமுறை ஆட்டக் கோட்பாட்டிற்கும் சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளின் விளக்கக் கோட்பாடுகளுக்கும் இடையே தனித்துவமான வேறுபாட்டை விளக்கியுள்ளார். ஆட்டக் கோட்பாடு மற்றும் பிற பொருளாதார அணுகுமுறைகளால் சித்தரிக்கப்படும் பகுத்தாய்வின் அடிப்படையில் முடிவெடுப்பது உண்மையில் மனித நடத்தையைக் கண்டறியாது என்றும், எனவே அனுபவ அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டு கோட்பாடுகளை உருவாக்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சிலோர் முற்றுரிமை (Oligopolistic competition) பகுப்பாய்வுகளுக்கும் அவர் புதிய கருத்தைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்டன் 1965இல் ஆட்டத்தின் விளைவுகளைக் கனிப்பதில் காரண காரணமற்ற நிலையினை வேறுபடுத்தி முடிவுகளை எட்ட கோட்பாட்டினை முன்மொழிந்தார். செல்டன் subgame perfection (துல்லியமான துணை ஆட்டம்) என்ற கருத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இருப்பினும், துணை ஆட்டத்தின் முழுமை தேவை கூட போதுமானதாக இல்லாத சூழ்நிலைகள் இருக்கலாம் என்பதை செல்டன் உணர்ந்தார்.

இது அவரை அவரது அடுத்த குறிப்பிடத்தக்கப் பங்களிப்பான trembling hand சமநிலைக்கு வழிவகுத்தது. ஒவ்வொரு ஆட்ட வீரரும் ஒரு தவறு நிகழும் ஒரு சிறிய நிகழ்தகவு இருப்பதாக நினைக்கிறார்கள் என்றும், அதாவது, ஒருவரின் கை நடுங்கும். ஒரு விளையாட்டில் ஒரு நாஷ் சமநிலை (நாஷ் சமநிலை என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒரு கூட்டுறவற்ற ஆட்டத்தில், எந்தவொரு வீரரின் எதிர்பார்க்கப்படும் விளைவையும் தனது சொந்த உத்தியை மாற்றுவதன் மூலம் மேம்படுத்த முடியாத ஒரு முடிவாகும்), அத்தகைய தவற்றுக்கான சிறிய நிகழ்தகவுகளுடன் கூடப் பெற்றால், அது trembling hand ஆகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

(1978): The Chain Store Paradox
(1975): Re-examination of the perfectness concept for equilibrium points in Extensive Game
(1959): Ein Oligopol experiment
(1999): Gane Theory and Economic Behaviour
(2004): Human Behaviour and Traffic Networks
(2004): Economics Lab: An Intensive Course in Experimental Economics

ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.econlib.org; www.leopoldina.org; www.cepr.org; www.mathshistory.st-andrews.ac

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *