அக்டோபர் 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஜெனி வினோகுரோவ் (Economist Evgeny Vinokurov Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எவ்ஜெனி வினோகுரோவ் – முனைவர் பு. அன்பழகன்

எவ்ஜெனி வினோகுரோவ் (Evgeny Vinokurov) அக்டோபர் 6, 1975இல் பிறந்த ரஷ்யப் பொருளாதார அறிஞர். மேம்பாட்டுப் பொருளாதாரத் துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர் ஆவார். அவரது ஆராய்ச்சி பேரியல் மற்றும் நுண்ணியல் பொருளாதாரம், பிராந்திய ஒருங்கிணைப்பு, உலகளாவிய நிதி, பொருளாதார கட்டமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளில் கவனம் பெற்றதாக உள்ளது. வினோகுரோவ் 20 புத்தகங்கள், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் அறிக்கைகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.

வினோகுரோவ் Eurasian Development Bank (EDB) மற்றும் The Eurasian Fund for Stabilisation and Development (EFSD) ஆகியவற்றின் நிறுவன இயக்குநரும் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆவார். வினோகுரோவ் ஆற்றல், நீர், டிஜிட்டல் இணைப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியவற்றை ஒத்துழைப்புக்கான முக்கியமான பகுதி என வெளிப்படுத்தினார். யூரேசியாவைப் பற்றி வினோகுரோவ் குறிப்பிடுகையில், அணுகுமுறை நடைமுறைக்கு ஏற்றதாக இருத்தல், அடையக்கூடிய இலக்குகளில் கவனம் செலுத்துதல், மற்றும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தால் போன்றவை ஒருங்கிணைப்பு உறுதியான முடிவுகளைத் தரும் என்றார். ஒட்டுமொத்தமாக, வினோகுரோவின் பணி அனுபவம் பொருளாதாரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் அவர்களின் நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

ஆதாரம்: www.valdaiclub.com; www.vinokurov.info

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *