நீல் ஷெப்பர்ட் (Neil Shephard) அக்டோபர் 8, 1964இல் பிறந்த பிரித்தானியப் பொருளாதார அளவியல் அறிஞர், 1988-1993ஆம் ஆண்டுகளில் லண்டன் பொருளாதார பள்ளியிலும், பின்னர் 2013வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தற்போது அவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
அவரது ஆராய்ச்சியானது கோட்பாடுகள் மற்றும் பயன்பாட்டுப் பொருளாதார அளவீடுகள் சார்ந்ததாக உள்ளன, புள்ளிவிவரங்களில் கணிசமான ஆர்வம் கொண்டவராகவும் அறியப்படுகிறார். சீரற்ற நிலையற்ற தன்மை (stochastic volatility) மற்றும் உருவகப்படுத்துதல் (simulation) அடிப்படையிலான அனுமானத்தின் பொருளாதார அளவீடுகளின் வளர்ச்சியில் அவர் முன்னணி பங்களிப்பாளராக இருந்து வருகிறார். பேய்சியன் தொடர் கற்றல் வளர்ச்சிக்கு அவர் முக்கிய பங்களிப்புகளைச் செய்ததுள்ளார், இதில் பொருளாதாரமும் அடங்கும்.
இணையவழி (ஆன்லைன்) கற்றலுக்கான உருவகப்படுத்துதல் அடிப்படையிலான அனுமான முறைகளை உருவாக்குவதில் நீல் ஷெப்பர்ட் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைச் செய்துள்ளார் மற்றும் பொருளாதாரத்தில் உயர் அதிர்வெண் நிதித் தரவை (high-frequency financial data) முதன்மையாகப் பயன்படுத்த அனுமதிக்கும் முறைகளுக்குப் பங்களித்துள்ளார். நீல் ஷெப்பர்ட் தற்போது அளவுரு அல்லாத பேய்சியன் முறைகள் (non-parametric Bayesian methods), உருவகப்படுத்துதல், உயர் அதிர்வெண் நிதி மற்றும் வருமான-தொடர்ச்சியான மாணவர் கடன்களை மதிப்பிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது கல்விசார் வாழ்க்கையில், துணை துகள் வடிகட்டி (auxiliary particle filter), பல சக்தி மாறுபாடு (multipower variation), பார்ன்டோர்ஃப்-நீல்சன்-ஷெப்பர்ட் (Barndorff-Nielsen-Shephard) மாதிரிகள், உணரப்பட்ட கர்னல்கள் (realized kernels) மற்றும் உணரப்பட்ட நிலையற்ற தன்மையின் அம்சங்கள் உள்ளிட்ட பரவலாகப் பயன்படுத்தப்படும் பல முறைகள் மற்றும் நுட்பங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆதாரம்: www.scholar.harvard.edu; www.iq.harvard; www.nuffield.ox.ac.uk
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

