அக்டோபர் 09 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி கால்வர்ட் சைமன்ஸ் & ஆலிவர் ஹார்ட் (Economist Henry Calvert Simons & Oliver Hart Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 09 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி கால்வர்ட் சைமன்ஸ் & ஆலிவர் ஹார்ட் – முனைவர் பு. அன்பழகன்

1. ஹென்றி கால்வர்ட் சைமன்ஸ் (Henry Calvert Simons) அக்டோபர் 9, 1899இல் பிறந்து ஜூன் 19, 1946இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சைமன்ஸின் பணவியல் மாதிரிகள் சிகாகோ பொருளாதாரப் பள்ளிக்கு (Chicago School of economics) அடித்தளமாக அமைத்தன. பெரும் மந்தநிலையின் சிக்கலைத் தீர்க்க நேர்மறையான திட்டத்தை உருவாக்க சைமன்ஸ் முயற்சியை மேற்கொண்டார், அதற்காகத் தனியார் நிறுவனங்களைப் புதுப்பிக்கச் சீர்திருத்தத் திட்டத்தை முன்மொழிந்தார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் 1930களில் ஏற்பட்ட போக்குகளை சைமன்ஸ் ஆராய்ந்தார், நெகிழ்வற்ற விலை மற்றும் பணச் சுருக்கம் ஆகியவை மந்தநிலைக்கான முக்கியக் காரணங்களாக அடையாளம் கண்டார். 1930களில், முக்கிய நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் வளர்ந்து, இதனால் பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். சிறிய உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து, வணிகமயமாக்கல், நிதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் மேம்பாடு அடைந்தது. இதன் விளைவாக, நிறுவனங்கள் திறமையான உற்பத்தி நுட்பங்களைப் பயன்படுத்தாவிட்டாலும், லாபகரமான நிறுவனங்களாகவே தொடர்ந்தன.

பணவியல் கொள்கையின் செயல்திறனை மேம்படுத்தவும், பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் தொடர்ச்சியான சுழற்சிகளைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவின் நிதிக் கட்டமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க விலை நிலை மிகவும் நெகிழ்வானதாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். இதற்காக, குறைந்தபட்ச குறுகிய கால கடன் வாங்குதலையும், பணப்புழக்கத்தின் மீது அதிகபட்ச அரசாங்கக் கட்டுப்பாட்டையும் அவர் ஆதரித்தார்.

ஆதாரம்: www.hetwebsite.net; www.newworldencyclopedia.org

*************************************************

2. ஆலிவர் ஹார்ட் (Oliver Hart) அக்டோபர் 9, 1948இல் பிறந்த பிரித்தானிய வம்சாவளி அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். ஒப்பந்தக் கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காக ஆலிவர் ஹார்ட்டுக்கு 2016ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசினை பெங்ட் ஹோல்ம்ஸ்ட்ரோம் என்பவருடன் சேர்ந்து பெற்றார். தனித்துவம் வாய்ந்த அவருடைய ஆராய்ச்சி முழுமைபெறாத ஒப்பந்தங்கள் என்பதைப் பற்றியதாகும். இதில் ஒப்பந்தக்காரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஏதும் முழுமையாகக் கூறப்படவில்லை, இதனால் ஒப்பந்த வடிவமைப்பானது பாதித்தது. முடிவுகள் பகுத்துணர்ந்து எடுப்பதற்கு அவருடைய கோட்பாடு பயன்பட்டது குறிப்பாக பொதுச்சேவைகள் தனியாரிடம் அல்லது அரசங்கத்தால் நடத்தப்படவேண்டுமா என்பது பற்றி முடிவெடுக்கப் பயன்படுகிறது.

ஆதாரம்: www.scholar.harvard.edu; www.nobelprize.org; www.britannica.com; www.lse.ac

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *