ஜான் ஹாடினோட் (John Hoddinott) அக்டோபர் 11, 1961இல் பிறந்த கனடா பொருளாதார அறிஞரான இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் உணவு, ஊட்டச்சத்து மற்றும் பொதுக் கொள்கை பேராசிரியராக உள்ளார். வாஷிங்டன், டி.சி.யில் உள்ள International Food Policy Rsearch Institute (சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்) இல் துணைப் பிரிவு இயக்குநராக இருந்த போது ஜான் ஹாடினோட், வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான காரணங்களை இனம் காணவும், இந்தப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான வழிவகைகளையும் கண்டறிந்தார்.
வறுமை, வீடுகளுக்கிடையே வள ஒதுக்கீடு, பள்ளிப்படிப்பு, தொழிலாளர் சந்தைகள், நிதி உதவி மற்றும் கணக்கெடுப்பு முறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டார். அவரது ஆராய்ச்சி முதன்மையாக வளரும் நாடுகளில் கவனம் செலுத்தியது, குறிப்பாக பங்களாதேஷ் மற்றும் எத்தியோப்பியா பற்றிய ஆய்வுகள் வேளாண்மை, சமூகப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
ஜான் ஹாடினோட் அவர்களால் 1970களின் முற்பகுதியில் குவாத்தமாலா (Guatemala) பற்றி ஊட்டச்சத்து தொடர்பாகத் தொடங்கப்பட்ட ஆய்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேற்கு கென்யாவில் ஒரு மண் குடிசையிலும், மாலியின் டிம்பக்டு அருகே ஒரு சிறிய நகரத்திலும் வசித்து வந்த அவர், முதன்மை தரவு சேகரிப்பில் பெரிதும் ஈடுபட்டார்.
அத்துடன் பங்களாதேஷ், கோட் டி ஐவரி, எத்தியோப்பியா, குவாத்தமாலா, கென்யா, மாலி, நமீபியா, நைஜர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் வீடுகளுக்கிடையே நிலவும் சமூக நிலைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆராய்ச்சியின் பெரும்பகுதி மனித மூலதன உருவாக்கம் மற்றும் விளைவுகளை மையமாகக் கொண்டுள்ளது. இது வீட்டுக்குள் வள ஒதுக்கீடு மற்றும் தொழிலாளர் சந்தைகளில் செயல்முறைகளை மாதிரியாக்குவதில் அவரது முந்தைய பணியின் அடிப்படையில் அமைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், அமெரிக்க வேளாண்மை மற்றும் பயன்பாட்டுப் பொருளாதார சங்கத்திலிருந்து பயன்பாட்டுக் கொள்கை பகுப்பாய்விற்கான புரூஸ் கார்ட்னர் நினைவுப் பரிசைப் பெற்றார்.
ஆதாரம்: www.human.cornell.edu; www.economics.cornell.edu; www.ifpri.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

