சார்லஸ் புவர் கிண்டில்பெர்கர் (Charles Poor Kindleberger) அக்டோபர் 12, 1910இல் பிறந்து ஜூலை 7, 2003இல் மறைந்த புகழ்பெற்ற MIT யில் (1948-1976) பணியாற்றிய அமெரிக்காவைச் சார்ந்த பண மற்றும் வர்த்தக பொருளாதார அறிஞர் மற்றும் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆவார். சார்லஸ் பி. கிண்டில்பெர்கர் 20ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச பொருளாதார அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மறுகட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை வகுக்க அவர் உதவினார். அவருடைய ஆராய்ச்சி களம் மற்றும் கற்பித்தல் சர்வதேச பொருளாதாரத்தைச் சார்ந்ததாக உள்ளது. பன்னாட்டு அளவில், செலாவணி மாற்று வீதம், தொழில்நுட்பங்கள், சர்வதேச மூலதன ஓட்டங்கள் மற்றும் வர்த்தக பெருக்கிகள் ஆகியவை தவிர்க்க முடியாத வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அந்நிய செலாவணி சந்தை பற்றி ஏராளமான படைப்புகளுடன், சர்வதேச பொருளாதாரத்தில் முன்னணி நிபுணராக கிண்டில்பெர்கர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
Theory of Hegemonic Stability (மேலாதிக்க நிலைத்தன்மையின் கோட்பாடு)
நிலையான பன்னாட்டு பண அமைப்பைப் பராமரிக்க மேலாதிக்க சக்தி அவசியம் என்பதை கிண்டில்பெர்கரின் கோட்பாடு முன்வைக்கிறது. ஒரு சர்வதேச அமைப்பில் கட்டளைகள் எவ்வாறு செயல்படுத்தமுடியும் முடியும் என்பதைப் புரிந்துகொள்ள அரசியல் விஞ்ஞானிகள் இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்துகின்றனர். கிண்டில்பெர்கர் தனது The Worlx in Depression 1929-1939 என்ற புத்தகத்தில், உலகளாவிய நிதிச் சந்தைகளைத் தொடர்ந்து வடிவமைக்கும் மூன்று காரணிகளை வலியுறுத்துகிறார் அவை, பீதி, தொற்றுநோயின் சக்தி மற்றும் மேலாதிக்கத்தின் முக்கியத்துவம் போன்றவை. கிண்டில்பெர்கர் International Economics (1953) என்ற மிகவும் புகழ்பெற்ற பாடப்புத்தகத்தை எழுதியுள்ளார், இது பல பதிப்புகளைக் கடந்து நீண்ட காலமாக இந்தத் துறையில் சிறப்புப் பெற்றிருக்கிறது. கிண்டில்பெர்கர் தனது 92 வயதில் மறைந்தார்.
ஆதாரம்: www.hetwebsite.net; www.ucpress.edu; www.encyclopedia.com; www.news.mit
*********************************
மார்க் லியோன் நெர்லோவ் (Marc Leon Nerlove) அக்டோபர் 12, 1910இல் பிறந்து ஜூலை 7, 2024இல் மறைந்த அமெரிக்காவினைச் சார்ந்த வேளாண் பொருளாதார அறிஞர், பொருளாதார அளவியல் நிபுணர் மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய புகழ்பெற்ற பேராசிரியர் ஆவார். 1969ஆம் ஆண்டில், பொருளாதாரத்தில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக அவருக்கு John Bates Clark Medal (ஜான் பேட்ஸ் கிளார்க் பதக்கம்) வழங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில், அவர் அமெரிக்கப் பொருளாதார சங்கத்தின் சிறப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லியோன் நெர்லின் முக்கிய பங்களிப்பாகக் கருதுவது உற்பத்தியாளர்கள் அளிப்பின் மாறும் மாதிரிகளை உருவாக்கியது ஆகும். இது செலவுகளைச் சரிசெய்தல் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளின் விளைவாக ஏற்படும் பின்னடைவுகளை வேறுபடுத்தி அளவிடப் பொருளாதார வல்லுநர்களுக்கு உதவுகிறது.
தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான புள்ளிவிவர முறைகளை உருவாக்கிப் பயன்படுத்துவதில் லியோன் நெர்ல் ஆற்றிய பணியானது, அமெரிக்கா மற்றும் வளரும் நாடுகளில் வேளாண்மை மற்றும் வளப் பொருளாதாரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அடிப்படையில் வேளாண் விவசாயிகள் விலையினால் எதிர்வினையாற்றுகின்றனர் என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் அறிந்துகொள்ள உதவியுள்ளது. பொருளாதார அளவியல் துறையில் நெர்லோவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக, குழு தரவு பகுப்பாய்வில் (Panel data analysis) சமவாய்ப்பு விளைவுகள் மாதிரிக்கான (Random effects model) மதிப்பீட்டாளராகும், இது பெரும்பாலான பொருளாதார அளவீட்டு மென்பொருள் தொகுப்புகளில் செயல்படுத்தப்படுகிறது.
1960களின் முற்பகுதியில் மின்சாரத் துறை குறித்த நெர்லோவின் ஆராய்ச்சி, உற்பத்தி செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு இருமை கோட்பாட்டின் (duality theory) முதல் பயன்பாடாகும். அவர் செலவு செயல்பாடுகளை மதிப்பிட்டு அவற்றிலிருந்து உறுதியான தொழில்நுட்பத்தின் மதிப்பீடுகளைப் பெற்றார். பொருளாதார மக்களாய்வு மற்றும் மக்கள்தொகை கொள்கைக்கு அவர் ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். நெர்லோவ், ரஸின் மற்றும் சட்காவுடன் சேர்ந்து, பொருளாதார மக்களாய்வு, வாழ்கை சக்கர கருவுறுதல் செயல்பாட்டுச் சமநிலை, தலைமுறைகள் மற்றும் பல்வேறு சந்தை ஏற்பாடுகளுடன் கூடிய மாறும் சமநிலை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
(1966): “Pooling Cross Section and Time Series Data in the Estimation of a Dynamic Model: The Demand for Natural Gas”இ Econometica, 34 (3), pp 585-612.
(1971): “Further evidence on the estimation of dynamic economic relations from a time-series of cross-section”, Econometrica, 39 (2), pp 359–382.
ஆதாரம்: www.arec.umd.edu; www.peoplepill.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

