அக்டோபர் 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ரோஜர்ஸ் காமன்ஸ் (Economist John Rogers Commons Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் ரோஜர்ஸ் காமன்ஸ் – முனைவர் பு. அன்பழகன்

ஜான் ரோஜர்ஸ் காமன்ஸ் (John Rogers Commons) அக்டோபர் 13, 1862இல் பிறந்து மே 11, 1945இல் மறைந்த அமெரிக்க நிறுவன பொருளாதார அறிஞர், ஜார்ஜிஸ்ட் (ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞரின் கொள்கைகளான இயற்கை வளங்கள் பொதுவானவை, உழைப்பின் பலன் தனிநபருக்கே போன்றவற்றைப் பின்பற்றுபவற்களைப் ஜார்ஜிஸ்ட் என்று அழைக்கப்படுகின்றனர்), முற்போக்கான மற்றும் தொழிலாளர் வரலாற்றாசிரியர் ஆவார். அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சினை மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாற்றிய சீர்திருத்தச் சட்டத்தின் பெரும்பகுதியை காமன்ஸ் வரைந்தார். இத்தகைய சட்டம் தொழிலாளர் சங்கங்களுக்கான சட்ட சலுகைகள், கட்டாய வேலையின்மை காப்பீடு, கட்டாய தொழிலாளர் இழப்பீடு மற்றும் பயன்பாடுகளை அரசு ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. சிவில் சர்வீஸ், பொதுப் பயன்பாடுகள் மற்றும் வேலையின்மை காப்பீடு ஆகிய துறைகளிலும் அவர் கூட்டாட்சி அரசாங்கத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்தார். ஊதிய வரிகள் மூலம் முதியோர் நலன்களுக்கு நிதியளிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் முதல் விரிவான திட்டமான 1935ஆம் ஆண்டு சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் வடிவமைப்பிற்கு அவர் பங்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான, சமரசமற்ற கருத்துக்களுக்கு எதிராகக் கூட்டுப் பேரம் பேசுதல் மற்றும் நடைமுறை சமரசத்தை காமன்ஸ் ஆதரித்தார். உழைக்கும் மக்களின் நடத்தையை விளக்கப் பொருளாதாரம் மட்டும் போதாது என்று காமன்ஸ் நம்பினார், எனவே அவர் ஒரு பரந்த அறிவாற்றலைப் பெற வரலாறு, சமூகவியல், உளவியல் மற்றும் சட்டம் ஆகியவற்றை கற்றறிந்தார். தொழிலாளர்களுக்கான இழப்பீடு, பாதுகாப்பு விதிமுறைகள் போன்ற தொழிலாளர்களுக்கான நிலைமைகளை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை அவர் முன்மொழிந்தார், மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் வளர்ச்சியில் ஈடுபட்டார். தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கையை மேம்படுத்தும் காமன்ஸின் பணி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியது.

பொருளாதாரத்தில் ஐந்து முக்கிய கருத்துக்களான equaity, bargaining, reasonableness, pragmatism and institutionalism (சமநிலை, பேரம் பேசுதல், நியாயத்தன்மை, நடைமுறைவாதம் மற்றும் நிறுவன வாதம்) அவர் கண்டுபிடித்தார், பின்னர் அதன் அடிப்படையில் அவர் தனது சீர்திருத்த முன்மொழிவுகளை உருவாக்கினார். 1934ஆம் ஆண்டில், காமன்ஸ் நிறுவன பொருளாதாரத்தை வெளியிட்டது. அரசு மற்றும் பிற நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையின் பகுப்பாய்வை உருவாக்குவக்கித் தந்தார், இது பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியமானது என்று அவர் கருதினார். மாநிலத்திற்கான பரந்த அளவிலான சமூகப் பிரச்சினைகள் குறித்து உண்மைகளைக் கண்டறிதல் மற்றும் சட்டத்தை வரைவதில் அவர் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளுடன் நிறுவனக் கோட்பாடு நெருக்கமாகத் தொடர்புடையது. அவர் ஒருபோதும் சீர்திருத்தங்களைப் பற்றி வெறுமனே கோட்பாடுகளை உருவாக்கவில்லை மாறாக, உண்மையான உலகத்திற்குச் சென்று, உண்மையான மக்களிடம் பேசுவார், எப்படி, என்ன மாற்றப்பட வேண்டும் என்று கேட்பார்.

ஆதாரம்: www.britannica.com; www.wisconsinhistory.org; www.newworldencyclopedia.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *