கார்ல் கவுட்ஸ்கி (Karl Kautsky) அக்டோபர் 16, 1854இல் பிறந்து அக்டோபர் 17, 1938இல் மறைந்த மார்க்சிய கோட்பாட்டாளர் மற்றும் German Social Democratic Party (ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி) யின் தலைவர் ஆவார். காட்ஸ்கி மரபுவழி மார்க்சியத்தை ஆதரித்தார், இது காரல் மார்க்ஸின் படைப்புகளின் அறிவியல், பொருள்முதல்வாத மற்றும் தீர்மானகரமான தன்மையை வலியுறுத்தியது. கார்ல் கவுட்ஸ்கி 1895 முதல் 1914 வரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மார்க்சிய கோட்பாட்டாளராகக் கருதப்படுகிறார். பிரீட்ரிக் ஏங்கெல்ஸைத் தவிற்று, மற்ற நபரையும் விட காட்ஸ்கி மார்க்சியத்தைப் பிரபலப்படுத்த அதிக உழைப்பினை வழங்கியுள்ளார். லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி உட்பட மார்க்சிஸ்டுகளின் முழு தலைமுறையும் முதன்மையாக காட்ஸ்கியிடமிருந்து கோட்பாட்டைக் கற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரத்திற்கான போராட்டத்திற்குப் பாராளுமன்ற நடவடிக்கையே மையமாக இருப்பதைக் கண்ட கவுட்ஸ்கி, The Class Struggle (வகுப்புப் போராட்டம்) என்ற நூலை எழுதினார். தொழிலாளர் வர்க்கமானது நாட்டின் அதிகாரத்தின் அடிப்படையான பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதில் முனைப்போடு இருத்தல் அவசியம் என்று குறிப்பிட்டார். சோசலிச மாற்றத்திற்கான அவரது முழுக் கோட்பாடும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வெல்வதை அடிப்படையாகக் கொண்டது அத்தகைய பெரும்பான்மையுடன் அமையும் அரசானது முதலாளித்துவத்தை கட்டுப்படுத்தும் என்கிறார்.
1894ஆம் ஆண்டில், காவுட்ஸ்கி Parlimentarism and Democracy (பாராளுமன்ற வாதம் மற்றும் ஜனநாயகம்) என்ற தலைப்பில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வரலாற்றை வெளியிட்டார், இது வாக்கெடுப்புகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து கூட்டங்கள் போன்றவை ஜனநாயகத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கு எதிராகவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது குறித்தும் விளக்குகிறது. குறிப்பாக, நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது ஒரு குறிப்பிட்ட முதலாளித்துவ அரசாங்க வடிவமல்ல, ஆனால் “மிகவும் மாறுபட்ட வர்க்க நலன்களுக்குச் சேவை செய்வதற்காக” பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் வாதிட்டார். அதிகாரத்திற்கான பாதையில், இரண்டு சமூக முன்னேற்றங்கள் சமூகப் புரட்சிகளின் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன என்று காவுட்ஸ்கி வாதிட்டார். முதலாவதாக, மூலதனத்தின் செறிவு மற்றும் மையப்படுத்தல் மிகவும் சக்திவாய்ந்த தேசிய முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இடையே ஏகாதிபத்திய பதட்டங்களுக்கு வழிவகுத்தது. இரண்டாவதாக, தொழிலாளர் இயக்கம் வலுவாக வளர்ந்து வந்தது, இது பெரிய வர்க்கப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதாகும். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னேற்றுவதற்குத் தொழிற்சங்க நடவடிக்கை மட்டும் இனி போதுமானதாக இருக்காது என்று கவுட்ஸ்கி குறிப்பிடுகிறார்.
மார்க்சிய அரசியலின் மையக் கருத்திலிருந்து காவுட்ஸ்கி விலகிச் சென்றது, போல்ஷிவிக் புரட்சியை நிராகரித்ததை கோட்பாட்டளவில் நியாயப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சியுடன் ஒத்துப்போனது. இதற்காக, கவுட்ஸ்கின் மகத்தான படைப்பான The Materialist Conception of History என்பதை 1927இல் வெளியிட்டார். மூலதனத்தின் முன்னுரையில், ‘தொழில்துறை ரீதியாக அதிக வளர்ச்சியடைந்த நாடு, குறைந்த வளர்ச்சியடைந்தவர்களுக்கு மட்டுமே அதன் எதிர்காலத்தின் பிம்பத்தைக் காட்டுகிறது’ என்று மார்க்ஸ் கூறியதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபிக்க முயன்றார். காவுட்ஸ்கியின் மார்க்சியம் அவரது வழிகாட்டிகளான மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் கருத்துக்களுடன் ஒத்துப்போனது, மேலும் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவ அமைப்பில் ஒப்பீட்டு நிலையில் காலத்துடன் இணைந்தது.
ஆதாரம்: www.britannica.com; www.upittpress.org; www.isj.org.uk; www.paulblackledge.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

