அக்டோபர் 19 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆங்கஸ் ஸ்டீவர்ட் டீட்டன் (Economist Angus Stewart Deaton Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆங்கஸ் ஸ்டீவர்ட் டீட்டன் – முனைவர் பு. அன்பழகன்

ஆங்கஸ் ஸ்டீவர்ட் டீட்டன் (Angus Stewart Deaton) அக்டோபர் 19, 1945இல் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்கப் பொருளாதார அறிஞர். அவரின் “நுகர்வு, வறுமை மற்றும் நலன் பற்றிய பகுப்பாய்விற்காக” அவருக்கு 2015ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. டீட்டனின் ஆர்வமுள்ள ஆராய்ச்சி துறைகளில் நுகர்வோர் சேமிப்பு, பொருளாதார நல்வாழ்வு, வறுமையை அளவிடுதல் மற்றும் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டுப் பொருளாதாரம் ஆகியவை அடங்கும். 20ஆம் நூற்றாண்டின் முதல் 70 ஆண்டுகளில் பிரித்தானிய நாட்டின் நுகர்வோர் தேவையின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய பகுப்பாய்வு செய்ததே டீட்டனின் முதல் பெரிய முக்கிய பங்களிப்பாக்க கருதப்படுகிறது.

குறியீட்டு எண்கள் குறித்த அவரது ஆய்வுப் பணி மற்றும் வாங்கும் திறன் சமநிலை ஒப்பீடுகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஆகியவை டீட்டனின் மிக முக்கியமான பங்களிப்புகள் ஆகும். உலகளாவிய வறுமை மற்றும் முன்னேற்றத்தை அளவிட இந்தக் கருவிகளைப் பயன்படுத்தினார், மேலும் நுகர்வு தரவுகளின் அடிப்படையில், உலகளவில் தீவிர வறுமை வியத்தகு முறையில் குறைந்துள்ளது மேலும் தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது என்ற முடிவினை எட்டினார். டீட்டன் அரசாங்கத்திற்கு அரசாங்கத்திற்கு இடையிலான வெளிநாட்டு உதவியை விமர்சித்துள்ளார். 1960 மற்றும் 2010க்கு இடையில், பணக்கார நாடுகளிடமிருந்து சுமார் 5 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு உதவி ஏழை நாடுகளின் அரசாங்கங்களில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அவர் தனது (2013இல் வெளியிடப்பட்டதில்) புத்தகத்தில் சுட்டிக்காட்டினார். அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு உதவச் சிறிய முயற்சியையே மேற்கொண்டன என்று டீட்டன் குறிப்பிடுகிறார். டீட்டன், தற்போதைய ஆராய்ச்சி பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் கவனம் செலுத்துகிறது, அதே போல் அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகளவில் வறுமை மற்றும் சமத்துவமின்மையை அளவிடுவதிலும் கவனம் செலுத்துகிறது.

Growth, Poverty in India (இந்தியாவில் வளர்ச்சி, வறுமை)

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வருவதாகவும், ஆனால் வறுமையின் வீழ்ச்சியானது எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக இருப்பதாகவும் டீட்டன் கூறியுள்ளார். இந்தியாவில் தேசிய கணக்குகள் பலவீனமாக இருப்பதாகவும், அவற்றை மேம்படுத்தச் சிறிய முயற்சியே எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டீட்டன், இந்தியா குறித்து சில புத்தகங்களை வெளியிட்டுள்ளார், அவற்றின் முக்கியமானது Food and Nutrition in India: Facts and INterpretations (2008), Price Trends in India and Their Ikplications for Measuring Poverty (2008), மற்றும் Regional Povewrty Estimates for India “இந்தியாவிற்கான பிராந்திய வறுமை மதிப்பீடுகள், 1999-2000” (2003) உள்ளிட்ட இந்தியாவில் வறுமை குறித்து டீட்டன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

(2013): The Great Escap: Health, Wealth and the Origins of Inequality
(2001): Health, Inequality and Economic Development
(1997): The Analysis of Household Survey: A Macroeconometric Approach to Development Policy
(1992): Understanding Consumption
(1980): Economics and Consumber Behaviour, with John Muellbauer

ஆதாரம்

www.britannica.com; www.econlib.org; www.nobelprize.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *