கார்ல் குஸ்டாவ் கேசல் (Karl Gustav Cassel) அக்டோபர் 20, 1866இல் பிறந்து ஜனவரி 14, 1945இல் மறைந்த ஸ்வீடிஷ் நாட்டுப் பொருளாதார அறிஞர் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர் ஆவார். அவர் புகழ்பெற்ற புதியதொன்மைப் பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆவார். வாங்கும் சக்தி சமநிலை பற்றிய அவரது பங்களிப்பிற்காக குஸ்டாவ் கேசலின் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார்.
அமெரிக்காவில் டாலரின் வாங்கும் சக்திக்கும் ஜப்பானில் அதன் மாற்று மதிப்புக்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும் என்று குஸ்டாவ் கேசல் குறிப்பிடுகிறார். சர்வதேசச் சந்தைகளுக்கு இடையிலான விலை வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகையான வர்த்தகமான ஆர்பிட்ரேஜ் (குறைந்த விலைக்கு ஒரு சந்தையில் வாங்கி மற்றோர் சந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் பெறுதல்) மூலம் சமநிலை உறுதி செய்யப்படும். ஒரு நாடு மற்றொரு நாட்டை விட அதிக பணவீக்க விகிதத்தைப் பராமரித்தால், அதிக பணவீக்க விகிதத்தைக் கொண்ட நாடு மற்ற நாட்டின் பணத்துடன் ஒப்பிடும்போது மதிப்பை இழக்கும் என்று குஸ்டாவ் கேசல் குறிப்பிடுகிறார்.
பணத்தையும் விலைகளையும் விளக்க, கேசல் பொதுவாகப் பணத்தின் அளவு கோட்பாட்டைப் பயன்படுத்தினார், இது புள்ளிவிவர தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டதாக குஸ்டாவ் கேசல் கருதினார். அவர் இந்த கோட்பாட்டை முதன்மையாக நிலையான (மற்றும் மூடிய) பொருளாதாரங்களுக்காக உருவாக்கியிருந்தாலும், சீரான முற்போக்கான சமூகம் என்று அழைக்கப்படுபவர்களுக்கு இதை ஒரு மாறும் கோட்பாடாக எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று அவர் நம்பினார். அவரது முதல் பொருளாதார வெளியீடானது Essay on English Classical Economics, இதில் குறிப்பாக ரிக்கார்டியன் பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் மிகவும் புகழ்பெற்றதாகும். அவர் 1918இல் The Theory of Social Economy வெளியிட்டார், இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாகப் பகிரப்பட்டது.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.hetwebsite.net; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

