கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ் (Christopher Albert Sims) அக்டோபர் 21, 1942இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அளவியல் நிபுணர் மற்றும் பேரியல் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றுகிறார். 2011ஆம் ஆண்டு தாமஸ் சார்ஜென்ட்டுடன் சேர்ந்து பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசை வென்றார்.
சிம்ஸின் தொடக்கக்கால குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளில் ஒன்று பணத்திற்கும் வருமானத்திற்கும் இடையிலான காரண காரியம் (causality) குறித்த அவரது ஆய்வுப் பணியாகும். 1972ஆம் ஆண்டில், சிம்ஸ் கிளைவ் கிரேஞ்சரின் காரணகாரியத்தின் பொருளாதார அளவீட்டுச் சோதனையைப் பயன்படுத்தினார். கிரேஞ்சரின் கருத்துப்படி, ஒரு மாறிலியானது (variable) மற்றோர் மாறிலியின் காரணத்திற்கானதாக இருக்கும் என்பதாகும்.
Macroeconomics and Reality என்ற சிம்ஸின் செல்வாக்குமிக்க கட்டுரையானது பெருமளவிற்கு கீன்ஸியன் மாதிரிகளின் பொருளாதார அளவீட்டு விளக்கம் ஆகும். இந்த மாதிரிகள் மீதான ராபர்ட் லூகாஸின் முந்தைய செல்வாக்குமிக்க விமர்சனம் ஆகிய இரண்டையும் விமர்சித்தது இந்தக் கட்டுரை. வெக்டர் ஆட்டோரிக்ரஷன் (VAR) மாதிரிகள் எனப்படும் பெரிய அளவிலான பேரியல் பொருளாதார மாதிரிகளுக்கு மாற்றாக சிம்ஸ் முன்மொழிந்தார்.
சிம்ஸின் பார்வையில், VAR முந்தைய பேரியல் மாதிரிகளின் நன்மைகளைக் கொண்டிருந்தது, ஏனெனில் இது கொள்கை பகுப்பாய்விற்குத் தேவையான ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான மாறிகளுக்கு இடையிலான சிக்கலான தொடர்புகளைக் காண முடியும். சிம்ஸின் சமீபத்திய படைப்புகள் விலை மட்டத்தின் நிதிக் கோட்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளன, பணவீக்கம் இறுதியில் நிதி சிக்கல்களால் தீர்மானிக்கப்படுகிறது, அடிப்படைப் பணம் மற்றும் பத்திரங்களுக்கு இடையிலான அரசாங்கக் கடனில் உள்ள பிரிவால் அல்ல, மாறாக அதைத் திருப்பிச் செலுத்தும் அரசாங்கத்தின் திறனுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த கடனின் அளவு என்று குறிப்பிடுகிறார்.
ஆதாரம்: www.econlib.org; www.britannica.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

