அக்டோபர் 22 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாமஸ் கூப்பர் (Economist Thomas Cooper Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாமஸ் கூப்பர் – முனைவர் பு. அன்பழகன்

தாமஸ் கூப்பர் (Thomas Cooper) அக்டோபர் 22, 1759இல் பிறந்து மே 11, 1839இல் மறைந்த ஆங்கில-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் தத்துவம், சட்டம், மதம், அரசாங்கம், அரசியல் பொருளாதாரம் மற்றும் பல்வேறு அறிவியல்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கூப்பர் தனது பொருளாதாரத்தை ஆடம் ஸ்மித்திடமிருந்தும் ரிக்கார்டேவிடமிருந்தும் நேரடியாக எடுத்துக் கொண்டார். தனியார் நிறுவனத்திற்கு எந்தவொரு அரசாங்க அதிகாரியையும் விடத் தனது வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நன்றாகத் தெரியும் என்ற கருத்தினை வெளியிட்டார். கூப்பர் பாதுகாப்பு (protectionist) வாதம் என்ற கருத்தினை வெளியிட்டார். பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியாரகப் கூப்பர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூப்பர் பொருளாதாரக் கோட்பாடுகளை முழுமையாக ஆராய்ந்தார், இதன் அடிப்படையில் அவர் உற்பத்திச் செலவு ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிக்காது என்று அவர் கூறினார், அது தேவையைச் சார்ந்து இருக்க வேண்டும் என்றார். எந்தவொரு வாங்குபவரும் ஒரு பொருளின் முதன்மை விலையைப் பற்றி ஒரு விழுக்காடு கூட கவலைப்படுவதில்லை, அது அவர்களின் பார்வைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்றார். நாட்டின் வரலாற்றின் போக்கை நிர்ணயிப்பதில் “அரசியல் பொருளாதாரத்தின்” முக்கியத்துவத்தை அவர் கண்டார். கூப்பர் தொடக்க நிலையில் உள்ள தொழிற்சாலைகள் மீது விதிக்கப்படும் வரியினை அவர் கடுமையாக எதிர்த்தார். தொழில்கள் நிகழ்காலத்தில் பெறும் நன்மைக்காக நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

ஆதாரம்: www.fee.org; www.encyclopedia.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *