அக்டோபர் 26 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லார்ஸ் பீட்டர் ஹேன்சன் (Economist Lars Peter Hansen Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 26 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லார்ஸ் பீட்டர் ஹேன்சன் – முனைவர் பு. அன்பழகன்

லார்ஸ் பீட்டர் ஹேன்சன் (Lars Peter Hansen) அக்டோபர் 26, 1952இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் 2013ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை, யூஜின் எஃப். ஃபாமா மற்றும் ராபர்ட் ஜே. ஷில்லர் ஆகியோருடன் சேர்ந்து பெற்றார். ஹேன்சனின் பணியானது மூன்று பகுதிகளை ஒன்றோடொன்று இணைத்து ஆராய்கிறது அவை, (1) சிக்கலான மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் போராடுதல்; (2) சந்தை மற்றும் சமூக மதிப்பீட்டிற்கான பேரியல் பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் தாக்கங்கள்; மற்றும் (3) சொத்து சந்தை தரவு மூலம் முதலீட்டாளர் நம்பிக்கைகளைப் புரிந்துகொள்வது போன்றவை ஆகும்.

பொருளாதார அளவியல், பேரியல் பொருளாதாரம், தொழிலாளர் பொருளாதாரம் மற்றும் நிதி உள்ளிட்ட பொருளாதாரத்திற்குள் பரந்த அளவிலான துறைகளில் ஹான்சனின் பணி குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதார பரிசை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ், பொருளாதார மாதிரியாக்கத்திற்கான அவரது புதுமையான பங்களிப்புகளை அங்கீகரித்தது, இது 2007-08 அமெரிக்க நிதி நெருக்கடி உட்படச் சொத்து சந்தைகளின் நடத்தை மற்றும் பேரியல் பொருளாதார ஏற்ற இறக்கங்களை ஆய்வு செய்யப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

பொருளாதாரத்தில் ஹான்சனின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு, அனுபவ தரவுகளுக்கு எதிராகக் குறைந்தபட்ச அனுமானங்களுடன் சிக்கலான பொருளாதார மாதிரிகளைச் சோதிக்க உதவும் மிகவும் நெகிழ்வான பொருளாதார அளவீட்டு முறையாகும் GMM (Generalised Method of Moments) நுட்பத்தை உருவாக்குவதாகும். GMM நுட்பத்தின் பயன்பாடு பேரியல் பொருளாதாரம், தொழிலாளர் பொருளாதாரம் மற்றும் நிதி ஆகியவற்றில் சிறந்த மாதிரிகளை உருவாக்க வழிவகுத்தது, இதில் சில பொருளாதார முகவர்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கற்றால் திறன்கள் பற்றிய மிகவும் யதார்த்தமான அனுமானங்களை உள்ளடக்கியது.

2008ஆம் ஆண்டில் தாமஸ் ஜே. சார்ஜென்ட்டுடன் இணைந்து எழுதிய Robustness என்ற புத்தகத்திற்கு வழிவகுத்த அவரது கூட்டுப் பணியில், ஹான்சன் ஒரு புதிய கோட்பாட்டின் அடித்தளத்தை அமைத்தார், இது காலப்போக்கில் மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகள் மாறும்போது எவ்வாறு முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதைச் சிறப்பாக விளக்குகிறது. 2007-08 நிதி நெருக்கடிகளின் போது ஏற்பட்ட சில பெரிய பொருளாதார மற்றும் நிதி ஏற்ற இறக்கங்களை விளக்க உதவும் வகையில் ஹான்சன் பின்னர் இந்த கூட்டுப் பணியை உருவாக்கினார்.

ஆதாரம்: www.britannica.com; www.nobelprize.org; www.larspeterhansen.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *