கார்ல் வில்லியம் காப் (Karl William Kapp) அக்டோபர் 27, 1910இல் பிறந்து ஏப்ரல் 4, 1976இல் மறைந்த ஜெர்மானிய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். வில்லியம் காப் சூழலியல் பொருளாதாரத்தின் (Ecological Economics) முன்னோடிகளில் ஒருவர். உற்பத்திக்கான சமூக செலவுகள், பொருளாதார திட்டமிடல், நிலையான வளர்ச்சி மற்றும் அறிவியல் பற்றிய விவாதங்களுக்கு அவர் பங்களித்துள்ளார்.
சுற்றுப்புறச்சூழல் சீர்குலைவைத் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்புற விளைவுகளாக (external effects) முன்வைப்பதைத் தாண்டி, உற்பத்திக்கான சமூக செலவுகள் பற்றிய அவரது முறையான பகுப்பாய்வு, பொருளாதாரக் கோட்பாட்டிற்கு மிகவும் அறியப்பட்ட மற்றும் பொருத்தமான பங்களிப்பாகும். அபராதம் மற்றும் வரிகள் போன்ற முன்கூடிய நடவடிக்கைகளுக்குப் பதிலாக, உற்பத்தியின் பகுத்தறிவுத் திட்டமிடலின் அவசியத்திற்காகத் தேவைக்களை அவர் முன்னிறுத்தினார்.
வில்லியம் காப்பின் The Social Costs of Private Enterprise என்ற புத்தகம் சந்தைப் பொருளாதாரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வெளிப்புறங்களுக்கு (social externalities) கவனத்தை ஈர்த்த முதல் பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றாகும். அவரது புத்தகம் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் அடிப்படை ஆதார படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமூக செலவுகள் பற்றிய வில்லியம் காப்பின் கருத்தின் மூலத்தில் open system character of the economy பற்றிய அவரது புரிதல் உள்ளது.
பொருளாதாரம் பரந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உட்பொதிக்கப்பட்டிருப்பதால் சமூக செலவுகள் துல்லியமாக எழுகின்றன என்பது வில்லியம் காப்பின் கோட்பாட்டின் மையக் கொள்கையாகும். உற்பத்தி சமூக அமைப்பிலிருந்து உடலியல் சார்புடைய (physical) மற்றும் தீர்க்கமான தூண்டுதல்களிலிருந்து பொருள் உள்ளீடுகளைப் பெறுகிறது. இது சமூக இனப்பெருக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு புள்ளி வரை எஞ்சிய கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் சீர்குலைந்து ஒழுங்கற்றதாக இருக்கலாம் என்றார். உண்மையில் வில்லியம் காப்பின், பொருளாதாரத் தன்மையின் முக்கிய பிரச்சனைகள் சமூகத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை வெளியே கொண்டுவந்தார்.
ஆதாரம்: www.kwilliam-kapp.org; www.exploring-economics.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

