அக்டோபர் 28 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அப்பா பி. லெர்னர் (Economist Abba P.Lerner Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அப்பா பி. லெர்னர் – முனைவர் பு. அன்பழகன்

அப்பா பி. லெர்னர் (Abba P.Lerner) அக்டோபர் 28, 1903இல் பிறந்து அக்டோபர் 27, 1982இல் மறைந்த ஒரு ரஷ்ய வம்சாவளியைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவரது பங்களிப்புகளில் பணவீக்கம், வேலையின்மை மற்றும் பன்னாட்டு வர்த்தகம் குறித்த படைப்புகள் அடங்கும். பொருளாதாரக் கோட்பாடு மற்றும் கொள்கையில் லெர்னரின் ஏராளமான பங்களிப்புகள் அவரை 20ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவர் மாணவராக இருந்தபோது வெளியிடப்பட்ட அவரது தொடக்கக்கால பங்களிப்புகள் பன்னாட்டு வர்த்தகக் கோட்பாடு மற்றும் பொது சமநிலைக் கோட்பாட்டுடன் தொடர்புடையதாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

1934ஆம் ஆண்டில், பொது சமநிலை உற்பத்திப் பொருளாதாரத்தில் முழுமையான பரேட்டோ-உகந்த (Pareto-optimality) நிலைமைகளை விளக்கும் தனது மிகவும் குறிப்பிடத்தக்கக் கட்டுரைகளில் ஒன்றை லெர்னர் வழங்கினார். இதன் விளைவாக, வருமானத்தின் தொடக்கப் பகிர்வு மட்டுமே சமூக திட்டமிடுபவரின் விருப்பப்படி உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். மேலும் அது ஒரு முழுமையான சந்தைப் போட்டி பொருளாதாரத்தைப் போலவே திறமையாக இருக்க முடியும் என்றார். லெர்னர் பொருளாதார ஜனநாயகத்திலும் நுகர்வோர் தேர்வின் முக்கியத்துவத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தார். தனியார் நிறுவனம் ஒரு சோசலிசப் பொருளாதாரத்தில் எந்தவொரு குறிப்பிட்ட தொழிற்துறையையும் மிகவும் திறமையானதாக நிரூபித்தால் அதைக் ஏற்க வேண்டும் என்று வாதிட்டார். புதிய-கீனிஸியன் கோட்பாட்டில் பணவீக்கத்தைக் கணக்கிடுவதன் முக்கியத்துவத்தை முதலில் அங்கீகரித்தவர் லெர்னர் தான். சிட்னி வெயின்ட்ராப் மற்றும் கீன்ஸிக்கு பிந்தைய பொருளாதாரத்திற்கு மையமாக மாறவிருந்த செலவு-உந்துதல் (cost push) பணவீக்கத்தின் பொதுவான வடிவமான விற்பனையாளரின் பணவீக்கம் (Selle’s inflation) என்ற கருத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.

அதிக வேலைவாய்ப்பு விகிதங்கள் பணவீக்கத்திற்கு எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை லெர்னர் நிரூபித்தார். மேலும் அவர் முற்றுரிமைச் சக்தியைத் தரப்படுத்துவதற்கான ஒரு முறையை உருவாக்கினார், இது லெர்னர் குறியீடு என்று அறியப்பட்டது. சந்தை பணவீக்க எதிர்ப்புத் திட்டம் என்று அவர் அழைத்ததன் மூலம் தேக்க நிலைக்கு (stagflation) லெர்னர் ஒரு மிகவும் தத்துவார்த்த தீர்வை முன்மொழிந்தார். இந்தத் திட்டம் நிறுவனங்கள் தங்கள் பயனுள்ள விலைகளை உயர்த்துவதற்கான உரிமையைப் பங்கிட்டிருக்கும், மேலும் அது நிறுவனங்கள் அந்த உரிமைகளை வர்த்தகம் செய்ய அனுமதித்திருக்கும். தனது வாழ்நாள் முழுவதும் அவர் சோசலிச வாதங்களுக்கான சார்புநிலையினைக் கொண்டிருந்தார், இத்துடன் திட்டமிட்ட பொருளாதாரங்களுக்கான வாதத்தைத் தொடர்ந்து முன்வைத்தார்.

ஆதாரம்: www.britannica.com; www.hetwebsite.net

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *