செர்ஜியோ டி. ரெபெலோ (Sergio T.Rebelo) அக்டோபர் 29, 1959இல் பிறந்த போர்த்துகீசிய பொருளாதார அறிஞர் ஆவார். ரெபெலோ, பேரியல் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு நிதி குறித்து ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டார். வணிக சுழற்சிகளின் காரணங்கள், பொருளாதார வளர்ச்சியில் பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் மற்றும் செலாவணி மாற்று விகிதங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை ரெபெலோ ஆய்வு செய்துள்ளார்.
நவீன வணிக சுழற்சி பகுப்பாய்விற்கான அடிப்படை கட்டமைப்பாக மூலதனக் குவிப்பின் புதிய தொன்மைப் பொருளாதார மாதிரியை அவர் உருவாக்குகிறார். பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கான இந்த மாதிரியின் தாக்கங்களையும், நிலையான நிலையைச் சுற்றியுள்ள தோராயமான இயக்கவியலைப் படிப்பதற்கான முறைகளையும் அவர் ஆராய்ந்தார். இந்த முறைகள் பேரியல் பொருளாதாரத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சி விகிதங்களில் குறிப்பிடத்தக்க நாடுகடந்த ஏற்றத்தாழ்வு, நாடுகளுக்கிடையேயான அரசாங்கக் கொள்கைகளில் உள்ள வேறுபாடுகளால் ஏற்படக்கூடும் என்று ரெபெலோ வாதிடுகிறார். பொருளாதார வளர்ச்சியில் வரிவிதிப்பு ஏற்படுத்தும் தாக்கத்தில் அவர் கவனம் செலுத்துகிறார். இந்த உன்னதமான படைப்பு நேரியல் வளர்ச்சி மாதிரியைப் பிரபலப்படுத்தியது. இந்த மாதிரியின் ஒரு பதிப்பு “R K” மாதிரி என்று அழைக்கப்படுகிறது, இதில் K என்பது மூலதனத்தையும் R என்பது ரெபெலோவையும் குறிக்கிறது.
உலக வங்கி, பன்னாட்டுப் பண நிதியம், பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர்கள் குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, மெக்கின்சி குளோபல் நிறுவனம், கோல்ட்மேன் சாக்ஸில் உள்ள குளோபல் மார்க்கெட்ஸ் நிறுவனம் மற்றும் பிற அமைப்புகளுக்கு ரெபெலோ ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.kellogg.northwestern.edu; www.sas.rochester.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

