அக்டோபர் 31 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜோன் ராபின்சன் (Economist Joan Robinson Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

அக்டோபர் 31 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜோன் ராபின்சன் – முனைவர் பு. அன்பழகன்

ஜோன் ராபின்சன் (Joan Robinson) அக்டோபர் 31, 1903இல் பிறந்து ஆகஸ்ட் 5, 1983இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். ராபின்சனின் அரசியல் கருத்துக்கள் இடதுசாரி பக்கம் மாற்றமடைந்தது, மாவோ சேதுங்கின் சீனாவையும் கிம் இல் சுங்கின் வட கொரியாவையும் பாராட்டினார். இதன் விளைவாக, ராபின்சன் பெரிய பொருளாதார அறிஞராக இருந்தும், ஸ்வீடிஷ் ராயல் அகாடமி நோபல் பரிசுக்கு அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜோன் ராபின்சன் 20ஆம் நூற்றாண்டில் கேம்பிரிட்ஜ் பள்ளியினரை ஒருங்கிணைத்த பொருளாதார அறிஞர் ஆவார். 1936 க்குப் பிறகு, தொடக்கக்கால மற்றும் மிகவும் தீவிரமான கீன்ஸியவாத அறிஞர்களில் ஒருவராக உள்ளார். புதிய-ரிக்கார்டியன் மற்றும் கீன்ஸிக்கு பிந்தைய பொருளாதாரப் பள்ளிகளின் தலைவர்களில் ஒருவர் ஆகும்.

ராபின்சன் 1933ஆம் ஆண்டு எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பொருளாதாரத்திற்கு நிறைவற்றப் போட்டி (imperfect competition) கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். முற்றுரிமை (Monopoly) மற்றும் நிறைவுப் போட்டியின் உச்சநிலைகளிலிருந்து விலகி, இறுதி நிலை வருவாய் வளைகோட்டின் மூலம் உற்பத்தி கோட்பாட்டை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்கியுள்ளார். கீன்ஸால் உருவாக்கப்பட்ட பேரியல் பொருளாதாரத்திற்கு ராபின்சன் முதன் முதலில் அதற்கான விளக்கத்தினை அளித்துள்ளார், இது ஒட்டுமொத்த உற்பத்தி கோட்பாடு” என்று வரையறுத்தவர். ஒரு பொருளாதார நிபுணராக மார்க்ஸை தீவிரமாக எடுத்துக் கொண்ட முதல் ஆய்வுகளில் ராபின்சனின் 1942 கட்டுரையும் ஒன்றாகும். இது மார்க்சிய பொருளாதாரத்தை அரசியல் சித்தாந்தத்தில் அதன் இருப்பிலிருந்து திறம்பட வரைய உதவுகிறது. ராபின்சன், மதிப்புக்கான உழைப்பு கோட்பாட்டால் ஈர்க்கப்படவில்லை என்றாலும், மார்க்ஸின் Extended scheme of reproducation தனது முக்கிய பங்களிப்பாக அடையாளம் காட்டினார். 1954ஆம் ஆண்டில், ராபின்சனின் The Producation Function and the Theory of Capital என்ற கட்டுரை கேம்பிரிட்ஜ் பள்ளியினரின் சர்ச்சைகளைப் பற்றியதாக இருந்தது. மூலதனத்தை அளவிடவும் ஒருங்கிணைக்கவும் முடியும் என்ற கருத்தை ராபின்சன் விமர்சித்தார்.

ஆதாரம்: www.econlib.org; www.britannica.com; www.ineteconomics.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *