#Bookday
முகில் அவர்கள் எழுதிய “ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் ” வாசகர்களை சுண்டி இழுக்கும் நடை, ஒலிம்பிக் பற்றிய அரிய செய்திகளை அதன் பின் இருந்த அரசியல், விளையாட்டின் மீது இருந்த காதல் என சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது புத்தகம். கருப்பின வீரர் ஜெஸ்சி ஓவன், இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த், முதல் முதலாக மாரத்தான் ஓடிய பெண் ரெவிதி ஒலிம்பிக் மீதுள்ள காதலால் பலநாள் பயணம் செய்து போட்டியில் கலந்து கொண்ட கியூப வீரர் கார்வாஜல் , ஷூ இல்லாமல் மாரத்தான் ஓடிய எத்தியோபிய வீரர் அடிபே, இன வெறிக்கு எதிராக பரிசு மேடையில் காலனிகளை கையில் வைத்துக்கொண்டு கருப்பு கையுறை அணிந்து எதிர்ப்பை தெரிவித்த ஸ்மித், கார்லோஸ் கருப்பர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேட்ச் அணிந்த ஆஸ்திரேலிய வீரர் நார்மன் என விளையாட்டில் இருந்த இனவாத அரசியலை எதிர்த்த வீரர்கள் என விருவிருப்பாக செல்கிறது. கடைசி அத்யாயம் இந்திய மல்யுத்த வீரர் ஜாதவ் கதையை விவரிக்கிறது. சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் கனவில் அரசு கண்டுகொள்ளாத நிலையில் பில் போட்டு நன்கொடை வாங்கி போட்டியில் பங்கேற்று இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நாயகன் அவர் வென்ற வைண்கல பதக்கம் நம்மை ஈர்க்கிறது. உயிரோடு இருக்கும் வரை அரசு அவருக்கு எவ்வித விருதும் வழங்காமல் கைவிட்ட பரிதாபம் இந்தியாவில் விளையாட்டு வீர்ர்களுக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு கட்டுரை முடிவில் வீடியோவை காண QR code கொடுத்துள்ளது சிறப்பு.

வாசிப்பை நேசிப்பவர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

வாசிப்பை சுவாசிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *