மொழிபெயர்ப்புக் கவிதை: *இருளில் வார்த்தை* – மராத்தியில் : ஓம்பிரகாஷ் வால்மீகி | தமிழில் : வசந்ததீபன்(1) இருளில் வார்த்தை
_______________________________

இரவு
ஆழமானதாகவும் கறுப்பானதாகவும்
இருக்கிறது
பஞ்சம் தாக்கிய துன்பத்தைப் போல
அங்கே ஆயிரக்கணக்கான வார்த்தைகள்
பிணங்களாய் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன
அவற்றின் விம்மல்களையும்
இவ்வளவு ஆழத்திலிருந்து
கேட்க முடியாது.

காலத்தின் சூறாவளியால் பயந்து
இறந்த வார்த்தைகளை மறுபிறப்பெடுக்க வைக்கும்
அனைத்து முயற்சிகளும்
அடையும் தோல்வி
அதை அடையாளம் காண முடியாது.

காலத்தின் குரலும்
உரத்த சப்தத்தில் பறையடிப்பவர்களும்
இப்போது மெளனித்து இருக்கிறார்கள்
” மடியில் குழந்தை
கிராமத்தில் தண்டோரா ”
பழமொழியும் இப்போது
அர்த்தமிழந்து இருக்கிறது.

பழைமை காலாவதியாகி இருக்கிறது
சிறு மத்தளத்தின்( டோல்)
அடிச் சத்தமும்
மலைக் கூடாரங்களின்
சுவற்றின் மீது
வேலைப்பாடு மிகு வார்த்தைகளும்
இப்போது
கோடுகள் மட்டும்
நிரம்பி இருக்கின்றன.

அவற்றை குறிப்பது
உனக்காக
அப்படித்தான் இருக்கிறது
கறுப்பு எழுத்து எருமைக்குச் சமமாக.

பயமுள்ள வார்த்தைகள்
இறப்பதற்கு முன்பு எழுப்பும் கூக்குரல் (துன்பக்குரல்) போல
அதை நீ கேட்க முடியாது
இல்லை
உனது இலக்கணமாகத் தான்
கவிதையில் இப்போது எந்தவித
அப்படியான சந்தம் இல்லை
அதை வர்ணிக்க முடியும்
கொழுந்து விட்டு எரியும்
வார்த்தைகளின் வெப்பம்.

நிற்க , கொஞ்சம் பெருமூச்சு இருக்கிறது
அது வார்த்தைகளின் இருட்டிலிருந்து
வெளிவந்து இருக்கின்றன
வெறுமையை நிரப்புவதற்காக.

ஹிந்தியில் : ஓம் பிரகாஷ் வால்மீகி

தமிழில் : வசந்ததீபன்ஓம் பிரகாஷ் வால்மீகி
_______________________________

பிறப்பு : 30 ஜூன் 1950
__________
இறப்பு : 17 நவம்பர் 2013
__________
இடம் : பரலா , முஜாப்ப்பர் நகர் ,
_________
உத்திர பிரதேசம்

சில முக்கிய படைப்புகள் : (1)
______________________________

ஸதியோங் கா ஸந்தாப் (1989)
(2) பஸ்ஸ , பஹூத் ஹோ சுகாதாரம் (1997)
(3) அப் அவுர் நஹீன் (2009)

மற்றவை :
____________

(1) ஜூட்டன் (சுயசரிதை ) _ 1997
(2) ஸலாம் (2007) _ சிறுகதைத் தொகுப்பு
(3) க்குஸ்பைட்டி ஏ (2004) _ சிறுகதைத் தொகுப்பு
(4) தலித் ஸாஹித்ய கா ஸெளந்தர்ய _ சாஸ்த்ர (விமர்சன நூல்) _ 2001
(5) ஸப்பாஈ தேவதா (2009) (வால்மீகி சமுதாயத்தின் வரலாறு)

விருது :
___________
(1) டாக்டர் அம்பேத்கார் விருது (1993)
(2) பரிவேஷ் விருது (1995)
(3) ஸாஹித்ய பூஷன் விருது (2008 _ 2009)