ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

சென்னை, ஏப். 23

ஓஎம்ஆர் புத்தகத் திருவிழா செவ்வாயன்று (ஏப்.23) பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய புத்தகக்காட்சிகளை தொடர்ந்து உள்ளூர் அளவிலான புத்தகக்காட்சிகள் வாசகர்களை கவர்ந்திழுக்கின்றன. இதனால் எளிய மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகின்றன. அதற்கு ஏராள மான முன்னுதாரணங்கள் உள்ளன.

சமூகம், காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ள அறிவுக்கொடையை அடுத்த தலைமுறைக்கு கடத்து வதும், மக்களின் மனங்களில் கொண்டு சேர்ப்பதும் முக்கிய மானது. “உள்ளூர் புத்தகக் காட்சி களை சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த வேண்டும். வாய்ப்பிருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் தோறும் நடத்த வேண்டும்” என்று எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வேண்டுகோள் கவனிக்கதக்கது.

“தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் புத்தக வாசிப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதும், அதை வளர்த்தெடுப்பதும் மனித குல விடுதலையை நேசிக்கும் அனை வரின் பொறுப்பாகும். உள்ளூர் அள வில் நடைபெறும் புத்தகக்காட்சிகள் வாசகர்களின் வாசிப்பை மேலும் மேலும் ஊக்குவிக்கின்றது. புத்தகங்களை நோக்கி வாசகர் கள் வர வேண்டும் என்பதையும் தாண்டி, வாசகர்களை நோக்கி புத்தகங்களை கொண்டு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

சிறு புத்தக விற்பனைக்காட்சி என்று மக்கள் இவற்றை புறந்தள்ளுவதில்லை. வாசகர்கள் தரும் ஒத்துழைப்பும், பரிவும் தமிழ்ச்சமுதாயம் வாசிப்பி லும் முதிர்ச்சி பெற்று வருவதையே காட்டுகிறது” என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வீட்டிற்கு, வாசகனுக்கு மிக நெருக்கமாக புத்தகத்தை கொண்டு செல்லும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. தொலைக்காட்சி, இணையங்கள் வாசிப்புக்கான தூண்டுதலாகவே உள்ளன. குழந்தைகளையும், சிறுவர் களையும் வாசிப்பு பழக்கத்திற்கு உட்படுத்த உள்ளூர் புத்தக் காட்சிகள் மிக அவசியம்” என்று ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிடு கிறார்.

அந்த வகையில், புத்தகங்களை மக்களிடையே கொண்டு செல்லும் பெரும் இயக்கத்தை 20 ஆண்டு களுக்கும் மேலாக பாரதி புத்த காலயம் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு மாநிலம் முழு வதும் புத்தக்காட்சியை நடத்து வதற்கு முன்பிருந்தே, பள்ளி, கல்லூரி, சிறுசிறு ஊர்களில் புத்தகக்கண்காட்சி, மாவட்ட அள வில் புத்தகத் திருவிழாக்கள் நடத்து வதை பெரும் இயக்கமாக பாரதி புத்த காலயம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக உலக புத்தக தினமான ஏப்.23ந் தேதி, ஓஎம்ஆர் புத்தகத்திருவிழா தொடங்கியது.

2019ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் இந்த புத்தகத்திருவிழா கொரோனா காலத்தில் தடைபட்டது. இதனை கடந்து 3 ஆவது ஆண்டாக நடை பெறும் இந்த புத்தகக் காட்சியை பாரதி புத்தகாலயம், புக்ஸ் பார் சில்ட்ரன், சிஐடியு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச , யுனைட், சோழிங்கநல்லூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் பேரமைப்பு, ஓஎம்ஆர் சிறீ சாய்நகர் குடியிருப்போர் நலச்சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சென்னை யூத் சென்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

 

பேராசிரியர் வி.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் க. அறிவொளி தொடங்கி வைத்தார். புத்தக விற்பனையை தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் (பபாசி) சேது சொக்க லிங்கம் தொடங்கி வைக்க, இயக்குநர் சீனுராமசாமி நூலை வாங்கிக் கொண்டார். ஆயிஷா நடராசன் சிறப்புரை யோடு நடைபெற்ற இந்த நிகழ்வில், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன், சோழிங்கநல்லூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் வி.பார்த்திபன், க.உதயகுமார் (தமுஎகச), வெல்கின் (யுனைட்), க.மலர்விழி (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

OMR புத்தக திருவிழா தொடக்க உரைகளிலிருந்து

 

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி: மின்சார விளக்கே இல்லாத கிராமத்திலிருந்து பல மைல் நடந்து பள்ளிக்கு சென்று, பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களைப் படித்து சராசரி மதிப்பெண்களே பெற்ற நான் இன்று 50000 பள்ளிகளை நிர்வகிக்கும் கல்வித்துறை இயக்குனராக உள்ளேன். பாடப் புத்தகங்கள் மட்டும் படித்தால் போதாது. மற்ற நூல்களையும் படிக்க வேண்டும்.

 

ஆயிஷா நடராஜன்: காவலர்கள் பாரதியாரை கைது செய்ய தேடிக் கொண்டிருக்கும்போது தலையை மொட்டை அடித்து கொண்டு குதிரை வண்டியில் வந்து ரங்கராஜன் அய்யங்காரிடம் இருந்த திலகரின் புத்தகத்தை மொட்டை மாடியில் படுத்து இரவோடு இரவாக படித்து முடித்து விட்டு மறுநாள் பத்திரிக்கையில் புத்தக அறிமுகம் என்று எட்டு நாட்கள் எழுதினார் பாரதியார். அதுதான் தமிழில் வந்த முதல் புத்தக அறிமுகம்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை கோவில்களில் பாடிக் கொண்டிருந்த ஶ்ரீநிவாச ராமானுஜன் தன் வீட்டில் உணவருந்த வருபவர்களின் கையில் இருந்த டிரிஞானமெட்ரி புத்தகத்தை படித்தே கணித அறிவையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டான்.

அறிவியல் மேதை மேகானந்த் சாஹா 15 மைல்களுக்கு மேல் நடந்து நூலகத்திலிருந்து புத்தகங்களை பெற்று எங்கோ இருந்த தெரு விளக்கின் அடியில் படித்து விஞ்ஞானி ஆனார். அவரது கண்டுபிடிப்பை ஐன்ஸ்டீன் புகழ்ந்தார். இது சாஹாவின் நூற்றாண்டு.

லண்டன் நூலகத்தில் புத்தகங்களைப் படித்து விட்டு ஓட்டலில் பாத்திரங்களை கழுவினார் அம்பேத்கார். தன் மக்கள் தூங்குவதால் தான்
இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பதாக கூறினார்.

இந்த புத்தகக்காட்சியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மே 2ந் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சி, காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். புத்தகக்காட்சிக்கு வருவோருக்கு நுழைவு கட்டணம் கிடையாது. புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது. இந்த புத்தகத் திருவிழாவை யொட்டி குழந்தைகளுக்கு ஏப்.27, 28 தேதிகளில் புத்தகக்காட்சி அரங்கில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு: 9444386494, 8778961607

நன்றி: தீக்கதிர் சென்னை பதிப்பு

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *