ராஜிலா ரிஜ்வான் எழுதிய ஒண்ணாப்பு அலப்பறைகள் (Onnappu Alaparaigal) - நூல் அறிமுகம் | பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

ஒண்ணாப்பு அலப்பறைகள் (Onnappu Alaparaigal)

ஒண்ணாப்பு அலப்பறைகள் (Onnappu Alaparaigal) – நூல் அறிமுகம்

 

“ஒன்னாப்பு அலப்பறைகள் ”
ராஜிலா ரிஜிவான்

தோழி ராஜிலா”விரல் இடுக்கில் வெளிச்சமாய்” தோன்றி “நானும் புத்தன் தான் “என நம் “காட்டில் அடை மழை “பெய்ய வைத்துள்ளார் “ஒன்னாப்பு அலப்பறைகள் மூலமாக.

வகுப்பறையில் நிகழும் மெல்லிய நிகழ்வுகளை தன் நினைவு பெட்டகத்தில் இருத்தி, யதார்த்த வார்த்தைகளில் கவிதையாய் பொழிந்து உள்ளார் ராஜி.

பார்த்த முதல் நாளே!உன்னைப் பார்த்த முதல் நாளே “என்று தோழி ராஜி, என் மனதை ஒரு பயிற்சியில் பார்த்தமுதல் நாளே கிரயம் முடித்தவள்.

இருபது வருட நட்பு, அவரது முதல் நூல் வெளியீட்டில் மேலும் இறுகியது.
“அலப்பறை காட்டாத “ராஜிலாவின் “அலப்பறை எழுத்துகள்” என்னை போன்ற ஆசிரியர்களின் தினசரி நாட்காட்டியின் பக்கங்களில் தினமும் விழும் வெண் முத்துக்களே.

மாணவர்கள் கண்ணாடி போன்றவர்கள். நாம் எப்படி தெரிகிறோமோ? அப்படியே அவர்களும் தோற்றமளிப்பார்கள்..🫰🏽

“ஓர் வகுப்பின் கற்றல்,கற்பிப்பது
நிற்கும் பொழுதே தொடங்குகிறது..”

ஆரம்ப பள்ளி மாணவர்கள் தாங்கள், பார்க்கும் ஆசிரியரின், செயல் மூலமே கற்கின்றனர் என்பதை, “வார்த்தைகளில் கவனம் “தலைப்பில், “இப்ப எதுக்கு கத்தறீங்க?? “என்று சொல்லும் மாணவர் வாயிலாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் கற்பித்துள்ளார் ராஜிலா.

“எப்ப டீச்சர் பெல் அடிக்கும் “என்ற சொல் நாம் கேட்கும் மந்திர சொல். முதல் வகுப்பின் முதல் நாளின் மந்திர சொல்.
அக்கா, அத்த, டீச்சரு, எப்ப வீட்டுக்கு விடுவ? என மழலைகளின் தொடர் கூக்குறல்களை நினைவுக்கு கொண்டு வருகின்றன.

“சிக்குன்னு வந்துச்சாம் ஐ” யில் சிக்கி கொண்டது பால்யம். இந்த காமராசாருக்கு வயசாகிருச்சு என சொல்லும் குழந்தை, அறிவு சாரலின் மெல்லிய தூறல்.

முன்னி பின்னியில்,
முன்னாடி வரும் எண் “முன்னி “னா பின்னாடி வர்ற எண் “பின்னி “தான என நான் கூட ராஜியிடம் கேட்டிருந்தேன்.

சிந்தனை சிறகுளை ராஜிலாவின் மெல்லிய அன்பால் விசிறி கொள்ளும் மாணவர்கள் பாக்கியசாலிகளே,.

முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு கைகளை ஆட்டி வண்டி ஓட்டும் மாணவன் ஆசிரியரை “ஒட்டியது “அழகு.

” எங்க அப்பாவுக்கு பைக் ஓட்ட தெரியாது” என்று சொல்லி ராஜியை ஒட்டியது உவட்டாத சிரிப்பலைகளை நெஞ்சக் கரையில் முட்டி சேர்த்து வகுப்பறை சுதந்திரத்தை நமக்கு கற்று தருகிறது.

எல்லாத்துக்கும் தமிழ்ல யும் இங்லீஷீலயும் ஒரே மாதிரி இருந்தால் எப்புடி இருக்கும் என பேசும் மாணவர்கள், குடை மிளகாய் க்கு “அம்பரெல்லா
சில்லி” என மொழி பெயர்த்தது அற்புதம்.

“கொசு ரத்தம் என்ன பிளட் க்ரூப்”? அறிவியல் பசிக்கு கிடைத்த பெருந்தீனி.
தவளை தவக்களை ஆவதும், “கரகம், ககரம்” ஆவதும், வகுப்புல சாதாரணமப்பா என சொல்ல தோன்றிற்று.

பேசாமல் இருந்தால் அஞ்சு மார்க் ப்ளஸ் பண்ண வேண்டும் என்ற கோரிக்கை நிறை வேற்ற பட வேண்டியது தானே? சனநாயக வகுப்பறையில் தான் இத்தகைய கேள்விகள் கேட்கப்படும். விவாதிக்கப்படும். “அது போன்ற வகுப்பறையை கட்டமைத்த ராஜிக்கு வாழ்த்துகள்”

உலகத்துல பெரியது பிரி யாணி தான் என நிரூபிக்க வேண்டுமா என்ன?

பஸ் கார், ஜீப், டீ, ஸ்கூல், டான்ஸ், ஆட்டோ னு எல்லாம் தமிழ் பெயராகி ரொம்ப நாளாச்சே!என யோசிக்க வைக்கும் தமிழ்ல பேர் வைக்கலயா டீச்சர்,? மாணவர் குரலின் ஆக சிறந்த கேள்வி.

மெல்ல மலரும் மாணவனின் மிமிக்ரி திறமை, மெய் சிலிர்க்க வைக்கிறது. எண்ணும் எழுத்தும் வகுப்பில் மெல்ல கற்கும் மாணவர்களின் திறன் வெளிப்படுவதை பார்த்துள்ளேன்.

அதே போல் வாழ்த்துகளும் சின்ன அங்கீகாரங்களும், மாணவர்களை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று சிலை செதுக்கும் உளிகள்.🫰🏽

தன் இதய கூட்டின் ஆழத்தில் இருந்து, மாணவ கண்மணிகளின் உணர்வு துடிப்புகளை துல்லியமாக கண்டறிந்து அதற்கேற்ப கற்றல் நிலைகளை வடிவமைத்த “மருத்துவ ஆசிரியர்,”தோழி ராஜிலா ரிஜிவானுக்கு, பேரன்பும், அன்பு முத்தங்களும்.

“அலப்பறைகள் தொடரட்டும்
அலும்புகள் நீளட்டும்.”

நூலின் தகவல்கள் : 

நூல் : “ஒண்ணாப்பு அலப்பறைகள்”
நூலாசிரியர்: ராஜிலா ரிஜ்வான்
பக்கங்கள் : 80
விலை : ரூபாய் 80/-
வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன்
தொடர்பு எண்: 044 2433242

நூல் அறிமுகம் எழுதியவர் : 

இரா. அப்பு கலை
திருநகர்
மதுரை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. ஒண்ணாப்பு அலப்பறை திருமதி ராஜிலா ரிஸ்வான் எழுதிய புத்தகம்
    ஒவ்வொரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவத்தை கண்முன்னே காட்டும் கால கண்ணாடி போன்றது..

    எனது அருமை தோழியின் வகுப்பறை அனுபவத்தை மிக அருமையாக குழந்தைகளின் எளிய உரையாடலை மிகத் தெள்ளத் தெளிவாக மிக அழகான வர்ணனையுடன் தங்களின் எழுத்துக்களில் காண்பித்துள்ளார்.

    ஒண்ணாப்பு அலப்பறை புத்தகத்தில் சிக்குனு வந்துச்சா ஐ
    என்ற மிக அருமையான வகுப்பறை அனுபவம்..

    கொசுவின் ரத்தம் என்ன பிளட் குரூப் குழந்தைகளின் ஆய்ந்து அறியும் திறனை வெளிப்படுத்துகிறது.
    முன்னி பின்னி, அஞ்சு மார்க் மைனஸ், மனசுல வைக்க வேணாம், போன்ற அனுபவங்கள் குழந்தைகள் எதார்த்தத்தையும், குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனையும், மிக அழகாக ராஜிலா ரிஸ்வான் அவர்கள் தன் எழுத்துக்களில் வடிவமைத்துள்ளார்…
    நிறைய தண்ணீர் குடிக்கணும், வார்த்தைகளில் கவனம், போன்ற அனுபவங்கள் இயல்பு வாழ்க்கையில் குழந்தைகள் எந்த அளவுக்கு உள்வாங்கி அதை போல் செயல்படுகின்றன என்பதனை மிக அழகாக வர்ணித்துள்ளார்
    தவளை, தவக்களை உலகத்திலேயே மிகப்பெரியது பிரியாணி,நிக்காஹ என்னும் திருமண அழைப்பிதழ், மெல்ல மலரும் மாணவன் ஆகிய வகுப்பறை அனுபவங்களில் குழந்தைகளின் மன உலகை மிக நுட்பமாக அறிந்திருப்பதனால் அவர் சரியான பார்வையோடு இந்த புத்தகத்தில் மிக அழகாக தன் எழுத்துக்களில் அணுக முடிந்து முடிந்திருக்கிறது அத்தகைய தெளிந்த ஞானமும் விரிந்த சிந்தனையும் பெற்றவராக திருமதி என் சக ஆசிரிய தோழி யான ராஜிலா ரிஸ்வான் இருக்கிறார் என்பதனை நினைக்கும் போது நான் அளவில்லா பேரானந்தம் பெருமையும் அடைகிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *