ஒண்ணாப்பு அலப்பறைகள் (Onnappu Alaparaigal) – நூல் அறிமுகம்
நிபந்தனையற்ற அன்பை செலுத்துவது ஆசிரியர்களிடம் மட்டுமே
நூலாசிரியர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர், கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ராஜிலா ரிஜ்வான்.
16 சிறுகதைகள் கொண்ட நூல் . இந்நூலின் மற்றும் ஒரு சிறப்பு ஒவ்வொரு கதைக்கும் அற்புதமான ஓவியம்.
இந் நூலினை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் ஆரம்பப்பள்ளி பயின்றபோது ஏற்பட்ட அனுபவங்களை, சேட்டைகளை நினைவூட்டும்.
தன் வகுப்பு குழந்தைகளின் அனுபவங்கள் பற்றிய அருமையான கதைகளே இந்த நூல்.
இந்த நூலின் ஆசிரியர் தன் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியராக மட்டுமல்லாது எல்லா குழந்தைகளுக்கும் தாயாக விளங்கிய அனுபவங்கள் தான் இந்தக் கதைகள்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்றவுடன் வகுப்பு குழந்தைகள் காட்டும் நேசம், அன்பு, அக்கறை, ரசிக்கும் படியான அவர்களது சேட்டைகள் எல்லாமே என் கவலையையும் வேறு சிந்தனைகளையும் மாற்றி நகைச்சுவையான சூழலுக்கு தள்ளிவிடும்.
வகுப்பறையில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் நேரத்தை விட அவர்களோடு கலந்துரையாடுவதும் கதை சொல்லும் நேரங்கள் தான் மிகவும் உயிரோட்டமாக இருக்கும்.
வகுப்பு குழந்தைகள் கூறும் பதில்கள் ஒவ்வொன்றும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
அப்படிப்பட்ட சம்பவங்களின் குறிப்பாக அனுபவங்களின் தொகுப்பே இந்த நூல்.

குழந்தைமை எனும் பெருமழையில் நனையும் வாய்ப்பு பள்ளி ஆசிரியர்களுக்கே உண்டு. குறிப்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு இது நிறைய கிடைக்கும்.
வகுப்பில் நடத்தும் பாடங்களை விட குழந்தைகளுடைய தனித் திறமைகளைக் அறிந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தவும் கல்வி கற்பதற்கான வழிகாட்டுதலும் வழங்கினால் அவர்கள் வாழ்நாள் முழுக்க பள்ளி ஆசிரியரை மறக்கவே மாட்டார்கள். ஆசிரியர்கள் வழங்கும் அன்பு அவர்களை எதையும் செய்ய வைக்கும் என்பதே உண்மை.
குழந்தைகளின் இரண்டாவது வீடு பள்ளியும் ஆசிரியர்களும் தான்.
தன் வகுப்பில் உள்ள குழந்தைகளின் அனுபவங்களை அப்படியே நம் கண் முன்னால் வடித்துக் காட்டி உள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு குழந்தைகளின் உளவியலை பேசுகிறது. அவர்கள் கற்றலை பேசுகிறது. குழந்தைமையின் வெகுளித்தனத்தை பேசுகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த கதைகள் நமக்கு சொல்லுகிறது.
இந்த நூலிலே வாசிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
குறிப்பாக தமிழக கல்வித்துறை இந்த நூலினை தமிழகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும்.
நூலின் தகவல்கள் :
நூல் : “ஒண்ணாப்பு அலப்பறைகள்”
நூலாசிரியர்: ராஜிலா ரிஜ்வான்
பக்கங்கள் : 80
விலை : ரூபாய் 80/-
வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன்
தொடர்பு எண்: 044 2433242
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

