இதுவரை துளிப்பா தொகுப்பு நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. ஊஞ்சலாடும் ஊசித் தும்பிகள் துளிப்பா நூலின் தனிச் சிறப்பு என்னவெனில் 64 கவிஞர்களை ஒருங்கிணைந்து உள்ளார் ஆசிரியர்.
இதில் பன்னாட்டுக் கவிஞர்களும் இணைந்துள்ளனர். அமெரிக்க நூலகங்களுக்கு இந்த நூல் அனுப்பப்பட்டுள்ளதால், அங்கிருக்கும் தமிழ் உறவுகள் கைகளில் இந்நூல் தவழும்.
64 கவிஞர்களும் எழுதிய ஹைக்கூ கவிதைகள் கதம்ப மாலையாக மணம் வீசுகிறது உலகெங்கும். ஒரு கவிஞருக்கு ஒன்பது ஹைக்கூ கவிதைகள் எனும் வீதத்தில், புத்தகம் கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
பல மணங்களில் ஹைக்கூ கவிதைகள் இருப்பதால், திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் ஆவல் ஏற்படுகிறது.
ஊஞ்சலாடும் ஊசித் தும்பிகள் துளிப்பா நூலிருந்து ஒரு சில மலர்கள் தாங்கள் நுகர….
- கிழிந்த கால் சட்டைகள்
வாலறுந்த வானவில்
பகலில் பட்டங்கள்
எழுதியவர்
அன்புடன் ஆனந்தி
வட அமெரிக்கா.
- மரப்பாச்சி பொம்மைக்கு
மாராப்பு போடுகிறாள் தமிழச்சி
மடியவில்லை மானம்.
எழுதியவர்
கு.அ. தமிழ்மொழி
இங்கிலாந்து.
- சுவர்க் கோழியின்
ரீங்காரம்
கெட்டது தூக்கம்
எழுதியவர்
வ.சு.வசந்தா
சென்னை.
- நீண்ட வரிசை
தண்ணீர் குழாயடியில்
குருவி
எழுதியவர்
சாந்தி சரவணன்
சென்னை.
- ஓங்கியது புயல்
வலுவடைகிறது
கரையோர ஓலம்
எழுதியவர்
இளையவன் சிவா
பொள்ளாச்சி.
இப்படி காட்சிகளாக, ஆதங்கமாக, ஆர்வமாக, பாசமாக, குமுறலாக பலரது வரிகள் ஹைக்கூ வானவில்லாக மிளிர்கிறது. இந்நூலைத் தொகுத்தளித்த தொகுப்பாசிரியர்களுக்கு, மேலும் செயல் சிறக்க, பாராட்டுகளும் வாழ்த்துகளும்…
நன்றியுடன்
கவிதா பிருத்வி
தஞ்சை.
நூல்: ஊஞ்சலாடும் ஊசித் தும்பிகள்
நூல் வகை: பன்னாட்டு துளிப்பா (ஹைக்கூ) தொகுப்பு
தொகுப்பாசிரியர்கள்:புதுவைத் தமிழ்நெஞ்சன், கன்னிக்கோவில் இராஜா
பதிப்பாண்டு: 2023, அக்டோபர்
பக்கங்கள்: 136
விலை: 160
வெளியீடு: நூலேணி பதிப்பகம்
கைபேசி: 9841236965
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்