oppari poem written by sakthi கவிதை: ஒப்பாரி - ச.சக்தி
oppari poem written by sakthi கவிதை: ஒப்பாரி - ச.சக்தி

கவிதை: ஒப்பாரி – ச.சக்தி

ஏவ் எப்போதும் போல
இன்னிக்கும்
நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா
ஆமாம் டி இன்னிக்கும்
நா குடிச்சிட்டு
தான் வந்திருக்கேன்

யாயா
படுபாவி ‌இப்படி
தெனமும் குடிச்சிட்டு
வந்தேனா
உடம்புக்கு என்னையா ஆகுரது
நீ பட்டுனு
நாக்கு வறண்டு
செத்து தொலைஞ்சிட்டனா ‌
எங்களுக்குனு
யாருயா இருக்கிறாங்க…?

வானம்
கூரையின்
வாசலை
பார்த்துக்கொண்டிருக்க
குடித்து குடித்து
குடல் சுருங்கி
செத்து போன
அப்பாவின் கண்கள் ‌
எண்ணிலடங்கா
நட்சத்திரங்களை
என்னிக்கொண்டியிருந்தது

….”அய்யோ‌ பாவி
மனுஷா இப்படி‌
எங்களை‌ அனாதையா
விட்டுட்டு‌ போயிட்டியே
யென நீளும் ‌
அம்மாவின் ஒரே
ஒரு‌ ஒப்பாரியில்
ஓராயிரம்
கண்கள் கலங்க
வானம் இன்னும்
பார்த்துக்கொண்டே
இருக்கிறது
கீழ் இறங்கி வராமல்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *