சமீபத்தில் வெளியான 12th fail என்கிற biopic படத்தை நானும் மகளும் கண்டோம், அதை பார்த்து நான் அவளிடம் நாம ஒன்னு வேணும்னு நினைச்சு எல்லா தடையும் எதிர்த்து போராடினால் அது நமக்கு ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும்னு படத்தில் அழகாக சொல்லி இருக்காங்க சொன்னேன் அப்போது மகள் ஒன்றை சொன்னால் அம்மா அதில் மனோஜ் குமார் ஷர்மா என்பவர் பள்ளியில் படித்து பிறகு இரண்டு degree முடித்து அதன் பின் அவர் பாட்டி அவரை அழைத்து தனது மொத்த சேமிப்பை அவரிடம் தந்து நீ நகரத்துக்கு சென்று படித்து போலீஸ் அதிகாரியாக வா என அனுப்பி வைக்கிறார் அதே வீட்டில் இருந்த பெண் கடைசி வரை வீட்டு வேலைகள் செய்பவளாக தான் வாழ்கிறாள் அவருக்கு கிடைத்த அந்த வாய்ப்பு பெண் என்பதால் தானே அவர் தங்கைக்கு கிடைக்கவில்லை என்றால் மகள்..

அவளது வாதம் என்னை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது , அந்த தாக்கத்தில் இருந்தே வெளி வராத நான் அடுத்து மோகனா அம்மையாரின் வாழ்க்கை வரலாறு படிக்க நேரிட்டது மகளது வாதத்தோடு அவரது வாழ்க்கையை என்னால் எளிதில் இணைத்து பார்க்க முடிந்தது.

2000 களில் நடந்த மனோஜ் குமார் தங்கைக்கே படிக்கும் வாய்ப்பு மறுக்க பட்ட போது 60 களிள் படிக்க எண்ணிய மிகவும் வறுமை நிலையில் வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த மோகனா அம்மாவுக்கு அது எவ்வளவு பெரிய தடையாக இருந்து இருக்கும்..

பெரும்பாலும் கஷ்டபட்டு படித்து பெரிய நிலையை எட்டியவர் என சொன்னதும் நினைவுக்கு வருவது அப்துல் கலாம் அய்யா அவர்கள் தான் , மோகனா அம்மா வாழ்க்கை வரலாறு படித்த பிறகு ஒரு ஆண் படிக்க பொருளாதாரம் மட்டுமே தடையாக இருக்கிறது அதை சமாளிக்க முடிந்தால் போதும் அவன் முட்டி மோதி மேலே வந்து விடுகிறான் ஆனால் பெண்ணுக்கு அப்படி அல்ல குடும்பம், சுற்றம், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் என அத்தனையும் பெண் கல்விக்கு தடையே அதுவும் மோகனா அம்மா வாழ்ந்த காலத்தில் அது இன்னும் அதிகம் .. இங்கு நான் கலாம் அய்யாவை குறைத்து மதிப்பிடவில்லை அவர் பட்ட கஷ்டத்தை விட பல மடங்கு போராடி வென்ற ஒரு பெண்மணியை பற்றி சில ஆயிரம் பேராவது தெரிந்து வைத்து இருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம் காரணம் பெண் என்பதை தவிர வேறு என்ன இருந்து விட முடியும்…

கல்வி மட்டுமே தன்னை கரை சேர்க்கும் என்பதை சிறு வயதிலேயே அறிந்த தீர்க்கதரிசி அவர் அதனாலேயே குடும்ப வறுமையை மீறி தன்னால் இயன்ற வீட்டு வேலைகள் மாடு மேய்த்தல் என அத்தனையும் செய்து கொண்டே படித்தும் இருக்கார் என யோசிக்கும் போதே மூச்சு முட்டுகிறது..

வறுமையை மீறி காவிரி ஆற்றை கடந்து பள்ளி சென்ற முதல் பெண் மோகனா அம்மா , பள்ளி முடித்து கல்லூரி செல்ல மேலும் தடை, திருமணம் செய்து வைக்க எண்ணிய பெற்றவர்களை எதிர்த்து கல்லூரி முடித்தால் மேல் படிப்பு படிக்க தடை அதிலும் தன் குடும்பமே சேர்ந்து அவருக்கு பிடித்த அல்வாவில் விஷம் வைத்து கொல்ல பார்த்த நிகழ்வு எல்லாம் படிக்கும் போதே நெஞ்சம் பட படக்கிறது..

படித்து முடித்து விட்டால் அவ்ளோதான் நல்ல வேலை கிடைத்து வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்லலாம் என்றால் அதுவும் முடியாது என்பதே ஒரு பெண்ணின் வாழ்வில் கசப்பான உண்மையாகி விடுகிறது ஆம் திருமணம் என்னும் பந்தம் ஒரு பெண்ணின் மொத்த வாழ்வையும் சீர் குழைக்கும் வல்லமை கொண்டது , ஆண் ஆதிக்க மனநிலை ஓங்கி இருக்கும் இந்திய நாட்டில் நல்ல கணவன் அமைவது தான் உண்மையில் இறைவன் கொடுத்த வரமாக இருக்க முடியும், ஏனோ அம்மாவுக்கு அது நரக வாழ்வாக அமைந்தது அந்த அத்தியாயங்கள் படிக்க படிக்க ஆண் சமூகம் மீது சொல்லொணா கோவம் வந்தது எனக்கு, அதே நேரம் அவரது இயக்க தோழர்கள் பற்றிய செய்திகள் படிக்கும் போது ஆண் சமூகத்தை மொத்தமாக ஒதுக்கி தள்ளி விடாமல் அவர் கையாண்ட விதம் என்னை ஆச்சரிய படுத்தியது..

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1
பேரா சோ. மோகனா

அவர் வாழ்வில் மிக கொடூர நாட்களை குடுத்த கணவன் என்பவனும் ஆண் தான் அதே வேளை அவரை மக்கள் இயக்கம் , அறிவொளி இயக்கம் , எழுத்து என வேறு தளத்துக்கு அழைத்து வந்தவர்களும் ஏராளமான ஆண்கள் தான்.. அம்மாவின் தோழர் அருணந்தி பற்றி படிக்கும் போது பாலின பேதமற்ற அழகிய நட்பு நம் கண் முன்னால் விரிந்து கொஞ்சம் பொறாமை கொள்ளவும் வைக்கிறது…

சிறு பிள்ளையாக இருக்கும் போது வறுமை ,கல்வி மறுப்பு, திருமண வாழ்க்கை பெரும் துன்பம் அவர் கடந்து வந்த பாதை அனைத்தும் நம்மால் யோசிக்க முடியாது என எண்ணி கொண்டு இருந்த போது அடுத்த அத்தியாயம் பெரிய இடி அது அவருக்கு வந்த புற்று நோய் பற்றியது..ஒருவருக்கு எவ்வளவு துன்பம் தான் வருமோ என படிக்கும் எனக்கும் அயர்சியை கொடுத்தது.. படிக்கும் நமக்கும் தான் அயர்ச்சி எல்லாம் அம்மா தான் இரும்பு பெண்மணி ஆயிற்றே அதையும் போராடி வென்று இப்போது புற்று நோய் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார் அதுவும் தன் 72 ஆவது வயதில்

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் புற்று வந்த பிறகு அவர் இன்னும் அதிகம் செயல்பட தொடங்கி இருக்கிறார் என்பதே.

தாய்சி கலையை கற்று அதில் முதுகலை பட்டம் பெற்று இருக்கிறார்..

போராளி என்கிற இடத்தில் மோகனா என்று வைத்து விடலாம் அது அவருக்கு பொருத்தமாகவும் இருக்கும்..

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அவரது இயக்க செயல்பாடுகள் அதிலும் முக்கியமாக துப்புரவு பணியாளர்களுக்கு என இவர் போராடுவது படிக்கும் போது நாமும் இது போல எதேனும் இயக்கத்தில் இணைந்தால் தான் என்ன என்று தோன்றியது..

பாலியல் வல்லுறுவு க்கு ஆளான பெண்ணை துணிந்து காப்பாற்றியது, நீதியரசர் தனக்கு மரியாதை செலுத்தவில்லை என்றதும் துணிந்து அவரை கேள்விக் கேட்டது என அவர் செய்த காரியங்கள் எல்லாம் மாஸ் ஹீரோ படத்தில் கூட இல்லாத அற்புத நிகழ்வுகள் படிக்கும் போதே சிலிர்ப்பாக இருந்தது..

போராளிக்கு துணிவை கற்று தர வேண்டுமா என்ன?Roseday special story: Cancer survivor Mohana Somasundaram | புற்றுநோயை வெற்றிகொண்ட மோகனா- Dinamani

சொல்ல ஆயிரம் என்னுள் தோன்றி கொண்டே இருக்கிறது அந்த அளவு என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது அம்மாவின் வாழ்க்கை..

ஒரு ஒரு பெண்ணும் படித்து தன் வாழ்க்கையை அம்மாவை போல மாற்ற சிறு துளியேனும் முயன்றால் போதும் அதுவே நாம் அம்மாவுக்கு செய்யும் பெரும் செயலாக அம்மா திருப்தி கொள்வார் என நம்புகிறேன்.

சில தோல்விகளில் துவண்டு இருந்த எனக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கலங்கரை விளக்காக அமைந்தது இந்த நூல்..

போராட்டம் தான் வாழ்க்கை அதில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் நாம் நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே.. துணிந்து செயல்பட என்னை துண்டிய அம்மாவுக்கு என் நன்றிகள்…

வாழ்வின் அத்தனை சவால்களையும் எதிர்த்து ஒரு கை பார்த்து அதை எல்லாம் ஓட விட்ட அம்மாவுக்கு நான் தலை வணங்குகிறேன்…சக தோழிகளைக் கொண்டாடுவோம்! - Her Stories

          நூலின் தகவல் 

நூல் : “மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை”

ஆசிரியர் : பேரா சோ. மோகனா

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

விலை : ரூ. 120

தொடர்புக்கு : 44 2433 2924 https://thamizhbooks.com/product/or-irumbu-penmaniyin-kadhai/

 

          எழுதியவர் 

காயத்திரி கோவை 

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

One thought on “பேரா சோ. மோகனாவின் “மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை” (வாழ்க்கை வரலாறு)”
 1. இரும்பும் துருவுக்கு பலியாகும்
  ஆனால்
  பேராசிரியர் மோகனா
  எதற்கும் அசையாமல்
  கவலைக் கடலில் மூழ்காமல்
  சுயபச்சாதாபம் கொள்ளாமல்
  தன் சுதந்திரத்தை நிலைநாட்டி
  பொது வாழ்க்கையில் ஜொலிக்கும் நட்சத்திரம்!
  மற்றவர்களையும் ஜொலிக்கும் வைக்கும் சூரியன்
  படித்தேன் படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *