இதயநிலவன் (Idhaya Nilavan) ஓரெண்டே.....ரெண்டே (orende rende) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் - Books For Children - https://bookday.in/

ஓரெண்டே…..ரெண்டே – நூல் அறிமுகம்

ஓரெண்டே…..ரெண்டே – நூல் அறிமுகம்

ஓரெண்டே..
ரெண்டே…
என ஆரம்பள்ளியில் வாய்ப்பாடு சொல்லும் போது இருகைகளை கட்டி வளைந்து. குனிந்து ஒரு சேர உச்சரித்த ஞாபகம் கண்முன்னே மீண்டும் ஒரு முறை வந்து போனது எனக்கு இதுவும் ஒரு உடல் பயிற்சி தானே.

இப்பொழுது
ஓரேண்டே…
ரெண்டே…
நாவல் வாசிக்கும் போது அதை உணர்ந்தேன்.

ஒரு கவிஞன் நாவல் எழுதும் போது கவிஞயத்திற்கு பஞ்சம் ஏது நாவல் ஆசிரியர் ஒவ்வொன்றையும்
குறிப்பிடும் போது சொல்வண்ணமும் கவிஞயமும் கரைபுரண்டு ஓடுகிறது.

என் தொலைதூர அலுவலக பயணம் முன்பெல்லாம். சலிப்பை ஏற்படுத்தினாலும் இப்பொழுது புத்தக வாசிப்புக்கான நேரமாகவும் .வாசிப்புக்களமாகவும் மாற்றி விட்டேன். அப்படி இரண்டு நாள் வாசித்ததுதான் இந்நாவல்.

நான் 2000 ல் காலகட்டத்தில் சிவகாமியின் சபதம், பொன்னின் செல்வன், பாவை விளக்கு என நாவல் படித்திருக்கிறேன். அதன் பிறகு இப்பொழுது தோழர் இதயநிலவன் அவர்களின் நாவலை வாசித்து ரசித்தேன்.

கல்வி என்பது வியாபாரமாய் மாறிப்போனப்பிறகு. அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்ப்பதும் அவர்களை தக்க வைப்பதும் எவ்வளவு கடினம் என்பதை ஆசிரியர் மிக தெளிவாக அவ்வளவு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது மிகச்சிறப்பு..

இதயநிலவன் (Idhaya Nilavan) ஓரெண்டே.....ரெண்டே (orende rende) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் - Books For Children - https://bookday.in/
                   எழுத்தாளர் இதயநிலவன்

நாவலின் முதற்பகுதியில் கதைமாந்தர் கவிதாவை பற்றி குறிப்பிடும் போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அத்துனை துயங்கள் என சொல்லும் போது ஒரு சிறுகதைபோல் தான் தெரிந்தது. அங்கிருந்துதான் நாவல் ஆரம்பிக்கிறது.

நமக்கு சிறு கஷ்டம் வந்தால் கூட துவண்டு ஒரு மூலையில் அமர்ந்து விடுவோம்..ஆனால் கவிதா டீச்சர் அப்படி இல்லை. இதை விட ஒரு பெண்ணுக்கு துயரம் வரப்போவது இல்லை..அதையெல்லாம் கண்டு துவண்டுவிடாமல் ..நெருப்பில் விழுந்தாலும் மீண்டும் எழும் பீனிக்ஸ் பறவையைப்போல். எழுந்து வருவது அவரின் தன்னம்பிக்கையை குறிக்கிறது.

கவிதாவுக்கு ஆறுதலாய் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி. தலைமை ஆசிரியர் கனகு பள்ளிக்குழந்தைகள் அவரின் தந்தை மற்றும் குழந்தை அவ்வளவுதான்..

அரசுப்பணி மற்றும் ஆசிரியர் பணியில் அறிக்கை அனுப்பியே முழுநேரத்தையும் செலவழிக்கும் காலமாய் போனது அதுவும் ஆசிரியர் பணியில் எமிஸ் என்பதே ஒரு சாத்தான் மாதிரிதான். இதையே செய்து கொண்டிருந்தால் எப்படி பாடம் கற்பிப்பது.

தனியார்மயம் தாராளுமயம் உலகமயம் என வணிகம் மாறியப்பிறகு சில நண்மைகள் இருந்தாலும் கல்வியில் தனியார்மயம் என்பது திடீரென வந்த காட்டாறு போல தன்னோடு சேர்த்து அத்துனை அரசுப்பள்ளி மாணவர்களையும் அபகரித்துக்கொண்டது.

இதற்கு யார் காரணம்.நாகரிக உலகில். தனியார் பள்ளியை நாடும் பெற்றோர்களா? இல்லை அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களா?
என வாதிட வேண்டும்.

இதயநிலவன் (Idhaya Nilavan) ஓரெண்டே.....ரெண்டே (orende rende) - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் - Books For Children - https://bookday.in/

இந்நூலில் அந்த அவலைத்தை தெளிவு பட காட்டிருக்கிறார். இதில் மத்திய அரசின் 25% ஒதுக்கீடும் ஒரு காரணமாய் அமைந்து போனதையும் ஆசிரியர். குறிப்பிட்டுள்ளார்.

நூறாண்டுகள் கண்ட பள்ளி கண்முன்னே அழிந்து போனது மிகப்பெரிய துயரம் அதற்கான காரணங்களை அழுதமாய் கூறியுள்ளார்..

அருமையான நாவல் நாம் அனைவரும் படிக்க வேண்டும்.
நாவல் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

எனக்கு என்னமோ!!
மொட்டை கம்பத்தில் காகம் அமர்ந்திருந்தது என்பதை மீறி அப்பள்ளியில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பது..

ஓரெண்டே
ரெண்டும் தான்.

 நூல் : அரசுப் பள்ளிகளும் அரசாங்கமும்!
ஓரெண்டே, ரெண்டே {நாவல்}
ஆசிரியர் : இதயநிலவன்.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
பக்கம் :170
விலை: 170/

மு. அழகர்சாமி தமுஎகச,
தேனிமாவட்ட துணைச்செயலாளர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *