கீர்த்தி | ஒற்றுமையை தேடி ஒரு பயணம் | Ortrumaiyai Thedi Oru Payanam | ராகுல் காந்தி

“ஒற்றுமையை தேடி ஒரு பயணம்”

சமகால மக்களின் மனநிலை வெளிப்படுத்தும் இந்த நூல் இந்திய சமூகத்தை ஆய்வு செய்து மக்களின் உணர்வுகளின் தொகுப்பே இந்த நூலாகும்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி 4000 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டார்.

ராகுல் காந்தி நடைபயணம் சென்ற பகுதிகளில் கீர்த்தி, கவிதா, நிஷா ஆகிய மூன்று பெண்கள் கார் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணித்து மக்களின் மனங்களை அறிந்ததோடு நடைபயணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை விரிவாக அலசுகிறது இந்த நூல்.

22 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலை பெண்ணிய சிந்தனையாளரும் உளவியல் நிபுணரும் சமூக ஆர்வலருமான கீர்த்தி மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் வீதிகளில் வசிக்கும் மனிதர்களைப் புரிந்து கொண்ட பயணம் இது. தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா தெலுங்கானா மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஹரியானா ராஜஸ்தான் டெல்லி பஞ்சாப் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ராகுல் காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி, மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலை எதிர்த்து ராகுல்காந்தி பயணித்து உள்ளார்.

ஒரு தலைவன், ஒரு பயணம், ஒரு செய்தி | அருஞ்சொல்

காஷ்மீரில் பயணித்த போது எங்கு நோக்கினும் துப்பாக்கி ஏந்திய வீரர்களாவே இருந்துள்ளனர்.

காஷ்மீர் முழுக்கவே திறந்தவெளி ஜெயிலாகவே இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

இந்திய எல்லைகள் எல்லைகளில் அன்பு வளர்வதற்கு பதிலாக அதிகாரம் வளர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாநிலங்களில் பயணிக்கும் போது மக்களுக்கான அரசியல் புரிதல் மிக குறைவாக இருப்பதையும் பெண்கள் அரசியல் பேசப் பயப்படுகிறார்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.

மத்தியில் ஆட்சி செய்து வரும் கட்சியின் மீது உள்ள அதிருப்தி பெருமளவு உள்ளதை பதிவு செய்துள்ளார்
அதிருப்தியை வெளியில் சொன்னால் தங்களுக்கு ஏதாவது நேரிடும் என்ற பயமும் மக்களிடமும் குறிப்பாக பெண்களிடம் உள்ளது.

மதவெறி அரசியல் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பெண்கள் தனியாக 4000 கிலோமீட்டர் பயணித்துள்ள பணித்துள்ளனர். குறிப்பாக அரசியல் பயணம்இது.

பல இடங்களில் பெட்ரோல் பங்குகளிலும் லாரிகள் நிற்கும் இடங்களிலும் தங்கி ஓய்வு எடுத்து சென்றது இவர்களின் துணிச்சலை காட்டுகிறது.

ஒற்றுமையை தேடி ஒரு பயணம் நூல் பயண அனுபவ நூலாக மட்டுமின்றி சமகால மக்களின் நிலையை வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது என்பதில் ஐயமில்லை.

இன்றைய அரசியலை புரிந்து கொள்ள என்னுலை வாசிப்பது அவசியம்.

 

நூலின் தகவல்கள்:

புத்தகம்: ஒற்றுமையை தேடி ஒரு பயணம்
ஆசிரியர்: கீர்த்தி
பதிப்பகம்: Pustaka Digital Media (P) Ltd., Bengaluru – 560076
தொடர்பு எண்: 7418555884

விலை: ₹.260.00

 

நூலறிமுகம் எழுதியவர்:

MJ. பிரபாகர்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *