மரணத்தின் வாசனை கலக்காத எந்த கதையும் இந்த தொகுப்பில் இல்லை. துயரப் படுபவர்கள் அதிஷ்டசாலிகள் ஏனெனில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்ற ஆறுதல் பொறியில் கிடப்பவர்கள் இந்த நூலின் கதைமாந்தர்கள் பல்வேறு கலங்களைக் கொண்டு இந்த நாள் சிறுகதைத்தொகுப்பு அமைந்திருப்பது விசேஷமாக உள்ளது மலையாள கதைகள் என்கிறபோது மலையாள சூழலும் வாழ்வியலும் கலாச்சாரமும் அதிகமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் ஆனால் உலகளாவிய பல நாடுகளின் பின்னணி கொண்ட கதைகள் இந்தத் தொகுப்பில் இருப்பது ஒரு முக்கிய அம்சம் சம்பா என்ற இலங்கைப் பெண் பற்றிய ஒரு கதை அப்படி விளையாட்டு கலையாக அமைந்திருக்கிறது அவள் சிலோன் காரி என்று அழைக்கப்படுகிறாள் போதையில் சிக்கி அழுகிறாள் ரம்பாவின் தகாத உறவு குழந்தை பிறப்பிற்கு கொண்டுசெல்கிறது அவள் படும் சிரமங்கள் அந்த கதையில் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கின்றன. கற்பிக்கும் கற்புக்கும் மனத்திற்கும் ஒரு விலையும் கிடையாது என்ற வசனங்களுடன் சம்பா தெரிய வேண்டியிருக்கிறது. இன்னொரு கதையில் ராவண கதாபாத்திரம் கைபேசியின் விளையாட்டுகளுடன் திரிகிறார் என்பது சுவாரஸ்யமானது சாதாரண விழிப்பு நிலை மக்களினுடைய வாழ்க்கையும் உயர்ந்த தரத்திலான அரசியல்வாதிகள் பணக்காரர்கள் வாழ்க்கையையும் இன்னொரு கதை துல்லியமாக சொல்கிறது டெல்லி பேட்டி முடித்து வருகிறவன் இந்த உலகத்தை காணும் போக்கு வேறு மாதிரி இருக்கிறது.
அதேசமயம் காமவ சிக்கிய குழந்தைகள் தூக்கி எறியப்படும் அறியப்படுவதும் கொல்லப்படுவதும் சாதாரணமான ஒரு டெல்லி பின்னணிக் கதை நகைச்சுவையும் ஒருவனோடு முடிகிறது எதார்த்த பொருளோடும் முடிகிறது வைஷ்ணவ ஜனதோ என்ற பாடல் முடிகிறபோது அது தருகிற கசப்பான எண்ணங்கள் மனதில் இருக்கிறது ஒரு ஆடை மட்டும் சேர்த்துக் கொண்டு விபச்சாரம் செய்து கொண்டு வாழ்க்கை பயணத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு கதையும் உண்டு இந்த நூலின் தலைப்பில் ஆன கதை ஒரு எழுத்தாளனின் பற்றியதாக இருக்கிறது காதலும் பெண்ணுடனான சிலை இடமும் என்று தொடங்குகிறது காலம் போன பின்னால் இந்த நிலைகள் எல்லாம் மாறி அவர்கள் துயரமான வாழ்க்கையை சுமந்துகொண்டு திரிகிறார்கள் இந்த கதை முழுக்க கொச்சின் சார்ந்ததாக விடப்பட்டிருக்கிறது கொச்சினில் முக்கிய இடங்களில் காதலர்கள் சந்திப்பும் பிரிவும் வந்து கொச்சி நகரத்தின் கலாச்சார தன்மையை மனதில் கொண்டு வந்துவிடுகிறது. படகுகளும் நீர்நிலைகளும் இந்த தலைப்பு கதையில் மனதை பகிர்ந்து கொள்கிற மாதிரி கப்பலில் பயணம் செய்கிற ஒரு அனுபவத்தை இன்னொரு கதை சொல்கிறது கப்பல் பயணத்தின் போது கடலில் ஏற்படுகிற சீதோசன மாற்றங்கள் கதாபாத்திரங்களின் பல மாற்றங்களை அந்த கதையை விரிவாக சொல்லி இருக்கிறது. கிராமம் என்ற கதை சாலக்குடி கிறிஸ்தவனின் விருந்து வைத்து அரேபியன் அழகி வயிற்றில் வளரும் விசித்திரத்தை சொல்கிறது இது வேற்று நாட்டு பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை தண்டனை என்ற கதை கருத்து சுதந்திரம் பற்றிய விவாதமாக இருக்கிறது யார் தீபாவை முன்வைத்து இன்னொரு கதையில் பல விவாத குறிப்புகள் இருக்கின்றன போர்களும் குடியிருப்புகளும் அவளின் மனதில் ஏற்படுத்தும் காயங்கள் அவளுடனான மட்டுமல்லாமல் உலகத்தின் மொத்த பெண்ணினத்திற்கு வடுவாக அமைந்துவிடுகிறது இந்தக்கதையில் இலங்கையில் வாழும் பெண்ணாகட்டும் எமிரேட்ஸ் நாட்டில் வாழும் பெண்ணாகட்டும் கேரள பெண்ணாகட்டும் டெல்லி பெண்ணாகட்டும் இவர்கள் படும் வாழ்க்கை துயரங்களால் நிரம்பியிருக்கிறது.
இந்த துயரங்களை சொல்லும் மனப்போக்கில் தீவிரத் தன்மையும் மொழியில் லாவகமும் இருக்கிறது இதை மொழிபெயர்த்திருக்கிறார் சிதம்பரம் ரவிச்சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி என்றாலும் அவரின் மொழிபெயர்ப்பு திறமையை ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார் தவிர்க்க இயலாத ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் கேரள மலைசார்ந்த ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையை எழுத்தாளரின் அனுபவங்களை அவர் தமிழில் கொண்டு வரும்போது அந்த எழுத்தாளரின் மன இயல்புகளை சரியாக கண்டுபிடித்திருக்கிறார் சபீனா என் சாலி எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஆண்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் சவுதி அரேபியாவில் பணி செய்து வருகிறார். பாக்தாதில் பன்னீர் பூக்கள் கண்ணியா வினோதம் வாக்கினிலே தெய்வம் போன்றவை இவரின் மற்ற படைப்புகள் சமஸ்கிருதி சி வி ராமன் விருது வெளிநாடு வாழ் மக்களுக்கான வாசிப்புக் பிரஸ்ட் விருது டிவி கொசு பாபா சிறுகதைக்கான விருது போன்ற ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார் என்று இந்த புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு சொல்கிறது. சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்கள் சார்ந்த பெண் பருவ கதைகளையும் வெளிநாட்டு சூழலில் பெண்களின் துயரங்களையும் மிகத் துல்லியமாக இந்த கதைகள் காட்டுகின்றன.
ஒவ்வொரு எழுத்தாளர்களும் தன்னுள் ஏதாவது ஒரு வகையான உள்ளொளியை வைத்துக்கொண்டு செயல்படுகிறார். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் எதார்த்தமாக அமையும். அது மகிழ்ச்சியோ துக்கமோ என்று எதுவாக இருந்தாலும் அவர்களுக்கான சொந்த பாணியில் நேர்மையாக வெளிப்படுத்துவர் பாத்திரங்களில் இயல்பை யாரிடமும் அளிக்காமல் அது போகிற போக்கில் பின் தொடர்வார். பாத்திரத்துக்கு மேலும் மேலும் வலிமை சேர்க்கும் விதமாய் வாழ்க்கைச் சூழலை கொண்டுவந்து காட்டி விடுவார். அப்படித்தான் சபீனா அவர்களும் தன் அனுபவ உலகில் இருக்கிற பல கதாபாத்திரங்களை அவர்களின் இயல்புடன் உலாவ விட்டிருக்கிறார். ஆனால் அவை தந்து போகிறாய் அவஸ்தைகள் மனதை தொட்டு கொண்டே இருக்கின்றன
கடல் மரங்கள் என்ற மலையாள எழுத்தாளர் வெள்ளியுடன் இன் கதைகளை தமிழில் கொண்டு வந்திருந்த திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது Rs140.
“ஒரு மழை நாளில்”
சபினா எம் சாலி – மலையாள சிறுகதைகள் …
தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன்
திருப்பூர் பொன்னுலகம் பதிப்பகம்

