ஒரு சிவப்பு நூலின் நெருப்பு பயணம் – ஸ்ரீ

ஒரு சிவப்பு நூலின் நெருப்பு பயணம் – ஸ்ரீ

கம்யூனிஸ்ட் அறிக்கையின்  172 ஆண்டு பயணம்

பகுதி 68

கம்யூனிச அறிக்கையின் முதல் பகுதியில் பத்தி 45 நடுத்தர வர்க்கத்தினரின் இயல்பு பற்றி பேசுகிறது..

🔥 அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக்கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

🔥 எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர்.

🔥 இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தமது நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.

நடுத்தர வர்க்கத்தினரை மிக சரியாக கணித்துள்ளனர் மார்க்சிய மூலவர்கள்..

அவர்களின் இயல்பு அது என்றாலும், அவர்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சியில் பங்கெடுப்பார்கள் என்பதால் அவர்களை அரசியல் படுத்துவது தொழிற்சங்கங்களின் கடமை.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *