இந்த புத்தகத்தை ஓரளவு ஆங்கில படமான Inception கதையோடு பொருத்தி பார்க்கலாம்.Inception கதையில் நாயகன் தன்னுடைய ஆழ்மனதில் கனவு காண்பான்.பிறகு கனவுக்குள் கனவு என்று கதை நகரும்.

அது போல தான் இந்த புத்தகம்.ஆயிஷா நடராசன் எழுதிய இந்நூல் சிறுவர்களுக்கானது.கதை,கதைக்குள் கதை,அதற்குள் புதிர்களும் அதற்கான விடைகளும் தான் “ஒரு தோழியின் கதை”!

நடுநாடு என்னும் ஊரில் தன் கோடை விடுமுறையை கழிக்க வருகின்றான் காசிம்.அந்த ஊரில் அவனுக்கு புதிய நண்பர்களாக சந்திராவும் சுப்பிரணியும் அறிமுகமாகிறார்கள்.இதற்கிடையில் சந்திராவின் பாட்டியான குருவிப் பாட்டி தினமும் அவர்களுக்கு கதை சொல்லுவாள்.

குருவிப் பாட்டி தான் அம்மூவருக்கும் கதா மண்டபத்தை பற்றி அறிமுகம் செய்தார்.அந்த கதா மண்டபத்தில் தான் ஒன்பது கதைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அப்படி என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த கதா மண்டபத்திற்கு செல்ல “ஒரு தோழியின் கதை” படிக்க வேண்டும்!

நான் கதா மண்டபத்தை பார்த்து விட்டேன்.அப்போது நீங்கள்???

புத்தகம் : ஒரு தோழியின் கதை                                                                                                                              ஆசிரியர் : ஆயிஷா.நடராசன்.
பக்கங்கள் : 64.
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம்.
விலை  : ரூ. 40/-                                                                                                                                                                  புத்தகம் வாங்க : thamizhbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *