மு. ராமநாதன் - ஆர்வெல்லின் ஆறு விதிகள் ( Orwellian aaru vithigal - M.Ramanadhan)

கல்வி மொழி சார்ந்த 26 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பெரும் கல்விப்புலம் ஏதுமின்றி அரசியலில் சாதித்து உயர்நிலையை எட்டிய முன்னாள் முதல்வர் ‘விதிவிலக்குகள் வழிகாட்டி ஆக மாட்டா’ என்ற நேர்மையான வார்த்தைகளை உதிர்த்ததும், தற்போதைய முதல்வர் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பேசிய கருத்துக்கள் முதல் கட்டுரையில் இடம்பெறுகின்றன.

ஆட்சிப் பணிகளில் தமிழக மானக்கரின் எண்ணிக்கை குறைவதை இரண்டாம் கட்டுரை விவரிக்கிறது. வலுவான கல்விக் கட்டமைப்பு கொண்ட தமிழகத்திலிருந்து ஆட்சிப்பணிக்கு அதிக அளவில் தமிழர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு மதவாதிகளின் சதிகளும் கூட காரணமாக இருக்கக்கூடும்.

நீட் தேர்வு எந்தெந்த வகைகளில் எல்லாம் சமூகநீதி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக அமைகிறது என்பதை மூன்றாவது கட்டுரை விளக்குகிறது.

நுழைவுத் தேர்வுகள் வேரில் வெந்நீர் ஊற்றும் பணியை கருணையின்றி செய்து விடுகின்றன. படித்தால் முன்னுக்கு வந்து விடலாம் என்ற ஏழை எளிய மக்களின் ஒற்றை நம்பிக்கையை கல்விச்சந்தையின் முதலாளிகள் கொடூரமாக ஒடுக்குகின்றனர்.

அரசுப் பள்ளிகள் எளிய மக்களின் குழந்தைகளுக்கான அறிவுத் தேடலின் கோயில்களாக விளங்குவதை தொகுப்பின் மூன்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் நிறுவுகின்றன.

தாய்மொழி வழியே பெரும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எத்தனை சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் விளக்கமாக எடுத்துக் கூறியும் மக்களின் ஆங்கில மோகமும், தெளிவின்மையும் மாறாத நிலையே நீடிக்கிறது.

எழுத்துக்கலை குறித்து ஆர்கவெல்லின் ஆறு விதிகள் கட்டுரை இத்தொகுப்பின் சிறப்பு எனலாம்.

எளிய வாசகர்களுக்கும் எழுதிவிடும் ஆர்வத்தை தூண்டிவிடும் நல்லதொரு கட்டுரை இது.

நூலின் தகவல்கள்:- 

நூல் : ஆர்வெல்லின் ஆறு விதிகள்” (கல்வி மொழி சார்ந்த கட்டுரைகள்)

நூலாசிரியர் : மு . ராமநாதன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

விலை : ரூ.150

பக்கங்கள் : 144

நூலறிமுகம் எழுதியவர்:- 

சரவணன் சுப்ரமணியன்

கணித ஆசிரியர்

மதுராந்தகம்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *