கண்மணி
உன் கண்மணியின் கடல் அலைகளில் மிதந்து மிதந்து வருவேன் நுரையாக…
குமிழி உடைக்கும் காற்றாய் கரையில் கரைக்காதே நுரையை..!
அன்பே தொலைதூர கலங்கரை விளக்கின் வெளிச்சமும்
பால்நிலா ஒழுகும் ஒளியும்
உன் கண்களில் ஒளிர்ந்திட கண்டேன்… காதலின் வெளிச்சம் பாய்ச்சிய கண்களால் இருளின் தனிமையில் தள்ளிவிடாதே..!
உன் நினைவுகளின் நட்சத்திரத்தின் மினுக் ஒளியில்
அணைந்து அணைந்து எரிகிறது என் எதிர்காலம்..!
உன் உள்ளங்கை சூட்டை கன்னங்களில் பூசிக்கொள்கிறேன் மீண்டும் உயிர்க்கிறேன்..
Osborn Joshua

