தொகுப்பு: அரசி ஆதி | வள்ளியப்பன் | ரூ: 70 பக். 144
சுந்தரராமசாமி, பூமணி, கிருஷ்ணன்நம்பி, பாவண்ணன், தமிழ்ச்செல்வன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வேணுகோபால், பாமா, தோப்பில் முகமது மீரான், லட்சுமண பெருமாள், ச.பாலமுருகன் – ஆகிய 13 படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. அனைத்தும் பள்ளிக்கல்வி, கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகள், அங்கு பிரம்பும் கையுமாக வாத்தியார்கள், அடிவாங்கி கைவீங்கி நொம்பலப்படும் மாணவர்கள் – குறித்த கதைகளே.