ப.கணேஷ்வரி கவிதைகள்

இனி குடையை மறக்க மாட்டீங்க...! | kikstarter ...

நாடோடியின் பாடலில் நனைந்துகொண்டிருக்கிறேன்

கையில் குடையோடு.
காலடிகீழ் பெருகிய மழைநீரில்
மிதக்கும் காகிதப் பறவயின்
கசங்கல் துளிகள்
மேல்நோக்கிப் பெய்யத்தொடங்கின.
குடைக்கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் நீர்த்திவளை
அறுந்து விழுவதாயில்லை.
ஆகையால் இனி மழை மேல்நோக்கிப் பெய்வதாய்ப் போனது.
பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு ...
வலப்புறம் வளர்ந்து நிழல்தரும்

கருவேலத்தில் படர்ந்திருக்கும்
செஞ்சிவப்பு பழமுண்ணி மைனாக்கள்
பாட்டையாவிற்கென வாங்கிவந்த சுருட்டின் புகைமண்டலத்தில்
மாரடிக்கும் கொண்டை சேவலின்
எந்தஒரு கர்ஜனைக்கும் ஏறெடுக்கவில்லை.
நெடுநா ஒள்மணியின் இடையறாத சத்தத்தில் பாட்டையாவின் ஆங்காரம் அடங்கியபின்
எதிர்க்கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
ஒவ்வொன்றாகப் பறக்கத் தொடங்கின.
 ப.கணேஷ்வரி
 மல்லி,திருவில்லிபுத்தூர்