Pa. Swathi's Poems | பா .சுவாதியின் கவிதைகள்

புற்றுநோய்

 

தினம் தினம்

இறப்பை எண்ணியும்

வாழும் வாழ்க்கையில்

நம்பிக்கை இழந்தும் !

தன் உறுப்புகளுடன்

தானே போரிட்டும்!

மருந்துகள் தேடப்பட்டும் !

தன்னைத்தானே வெறுத்தும் !

படுத்தப்படுகையில்

கண்ணீர் மட்டும் நண்பனாகியும் !

இறப்பை விட

வாழும் வழி நரகமாகியும் !

கொடுமையில் தவிக்கும்

புற்றுநோயளிகள் …

இதைவிடவும் அபாயமானவை

புற்றுநோயாக சில

உறவுகள்

 

தேர்

 

தெய்வத்தை தாங்கும் தேருக்கு

ஆரவாரத்துடன் அலங்காரமும் !

ஊராரோடு ஊர்வலமும் !

பல காணிக்கைகள் பலரிடமிருந்து !

கவலைகள் ஏதுமின்றி

கடமையை செய்தும் !

ஒவ்வொருவரும்

ஆனந்தத்தில் மிதக்க !

தேரோ குழப்பத்தில் கிடக்க !

தேரையிலுத்து தெருவில்

விட்டார்கள் !

ஒரு நாள் கூத்தாய் கொண்டாடிவிட்டு

மறுநாள் மறந்தார்கள் !

மணப்பெண்ணும்

திருவிழா தேரும்

ஒருவகையில் ஒன்றாகிறது !




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



One thought on “பா .சுவாதியின் கவிதைகள்”
  1. சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துகள் சுவாதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *