ப.திருமலை எழுதிய "காந்தியும் சுற்றுச்சூழலும்" புத்தகம் ஓர் அறிமுகம் | Pa Thirumalai's Gandhiyum SutruSuzhalum Book Review | www.bookday.in

ப.திருமலை எழுதிய “காந்தியும் சுற்றுச்சூழலும்” – நூல் அறிமுகம்

“காந்தியும் சுற்றுச்சூழலும்” – நூல் அறிமுகம்

“வளர்ச்சி எனும் வன்முறை”

இந்தியாவின் வானம் இரண்டு கொண்டு வருகின்றது. இது வெறும் வானிலை மாற்றம் அல்ல நம் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தும் அரசியல் கொள்கைகளின் நிழல் தான் இது இந்தியாவில் சூரிய ஒளி நேரம் கணிசமாக குறைந்துள்ளதாக விஞ்ஞானிகளின் ஆய்வு தெரிவிக்கிறது.

சூரிய ஒளி குறைவுக்கு முக்கிய காரணம் தொழிற்சாலைகள் வாகனங்கள் மற்றும் பயோமாஸ் எரிப்பிலிருந்து வெளியேறும் நுண்துகள்கள் தான் என தெரிவிக்கின்றனர்.

சூரிய ஒளி குறைவதால் நமது உடலில் மிக முக்கியமான வைட்டமின் டி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

மக்களின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைக்கிறது. விவசாயத்தில் மகசூல் இழப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இன்றைக்கு உள்ள சுற்றுச்சூழல் கொள்கை தளர்களும் முக்கியமான காரணமாகும்.

இயற்கை வளம் சகல ஜீவராசிகளுக்குமானதாகும் . ஆனால் இயற்கை வளம் அனைத்தும் நமக்கு மட்டுமே உரியது என்ற பேராசையின் காரணமாக நாம் அவற்றின் சூறையாடிக் கொண்டிருக்கிறோம். வீணடிக்கிறோம். நாசம் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு அபாயகரமான நிலையில் இருக்கிறது என்பதையும் அனைவராலும் உணர முடியும்.

இந்தியா சுற்றுச்சூழல் நெருக்கடியில் சிக்கித் திணறி கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதும் விளைநிலங்களையும் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலங்களையும் எந்த ஒரு வருத்தமும் கூச்சமும் இல்லாமல் கையகப்படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் தான்.

இன்றைக்கு புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் குறித்து நாம் அதிகம் பேசுகின்றோம். இதன் பாதிப்புகளையும் நாம் அதிகமாக உணர்கின்றோம். மக்கள் தொகை அதிகரிப்பு, வறுமை, எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, விரைவான தொழில் மயமாக்கல், நகர் மயமாக்கல், பாலைவன உருவாக்கம், காடழிப்பு மற்றும் அணுசக்தி அபாயங்கள் இப்படி மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் நமது பூமிக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பை இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. அத்தோடு நீர், நிலம் ,காற்று, ஆகாயம் என அனைத்தையும் மாசு படுத்திக் கொண்டே இருக்கிறோம் கடல் பரப்பையும் கூட நாம் விட்டு வைக்கவில்லை.

இயற்கை வளங்களை எவ்வளவு குறைவாக நுகருகின்றோமோ அவ்வளவு பூமிக்கு நல்லது. சூழியல் பாதுகாப்பில் எளிமை மிக முக்கியமானதாகும். எளிமையின் மகத்துவத்தை மகாத்மாகாந்தி மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.

அதுபோன்று நவீன பொருளாதாரமானது சுற்றுச்சூழலை ஆபத்தில் ஆழ்த்தி மனிதனை மேலும் பொருள் முதல்வாதியாக்குகிறது. உண்மையான பொருளாதாரம் சமூக நீதிக்காக நிற்கிறது . அது பலவீனமானவர்கள் உட்பட அனைவரின் நன்மையும் சமமாக ஊக்குவிக்கிறது மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு அது இன்றியமையாதது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

ஒரு நகரம் உருவாகும்போது அல்லது வசதிகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது நாம் இயற்கையை சூறையாடுகிறோம்.

குடியிருப்புகளுக்காக கண்மாய்களை காடுகளை அழிக்கின்றோம். பயணத்தை விரைவாக்கசாலையோர மரங்களை வெட்டி சாலைகளை அகலப்படுத்துகிறோம். இவற்றை வளர்ச்சி என பெருமிதப்பட்டுக் கொள்கிறோம். இது வளர்ச்சி என்ற பெயரில் நாம் நிகழ்த்தும் வன்முறையாகும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளை மகாத்மா காந்தி அன்றே குறிப்பிட்டுள்ளார்.

“அதீத நுகர்வோர் கலாச்சாரம்” தேவையற்ற கழிவை கொண்ட சமூகமாக மாறிவிடும் என்று மகாத்மா காந்தி அவர்வாழும் காலத்திலே நமக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.

மகாத்மா காந்தி சுற்றுச்சூழலை மாசு படுத்தாத சிறிய உள்ளூர் மற்றும் கிராம அடிப்படையிலான தொழில்நுட்பத்தை ஆதரித்தார்.

சர்வதேச அளவில் காந்திய சிந்தனையான அகிம்சை ஏற்றுக் கொள்ளப்பட்டால் போர்கள் மற்றும் ஆயுத உற்பத்தி குறையும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும் போர்களில் உயிரிழப்பு ஒரு புறம் இருந்தாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு மிகப்பெரியது என குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு நடைபெற்ற கொண்டிருக்கும் உக்ரைன் போன்ற மிக சமீபத்திய மோதல்களில் கூட மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரினால் காட்டுத்தீ, காடஅழிப்பு காற்று மற்றும் நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளதை மிகுந்த கவலையோடு தெரிவிக்கின்றது.

இயற்கையை அதனால் தான் சொந்த பாதையில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் கூற்று.

ஒவ்வொரு மனிதனும் பிற உயிர்க்கோ உடைமைகோ தீங்கும் செய்யாத வகையில் தன் விருப்பம் போல் காரியங்கள் செய்ய முடிந்தால் அதுதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்பு இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு மோசமான காலகட்டங்களாக இருந்தது 1)இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த நெருக்கடி நிலைகாலகட்டம். 2) இன்னொன்று தற்போதைய காலகட்டம். குறிப்பாக தபோல்கர் பன்சாரே, கல்புர்க்கி, கௌரிலங்கேஷ் என கருத்து சுதந்திரத்திற்கு கழுத்தை நெரிப்பதில் புது உச்சத்தை அடைந்து உள்ளது இப்போதைய காலகட்டம்.

ஜனநாயகத்தின் சவால்கள் என்பது கல்வியறிவின்மை, வறுமை, பாலின பாகுபாடு, பிராந்தியவாதம் சாதிவாதம் வகுப்புவாதம் மற்றும் மத அடிப்படைவாதம், ஊழல், அரசியலை குற்றப்படுத்துதல், அரசியல் வன்முறை போன்றவைகளாகும். மேற்கண்டவைகளை நாம் களைய வேண்டும் என்று மகாத்மா காந்தியடிகள் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இவைகளை கலைந்தால்தான் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் கையில் அதிகாரம் வரவேண்டும்.

இன்றைக்கு அரசியலைக் குற்றமாக்குதல் என்பது அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தேர்தல் அரசியலில் குற்ற பின்னணி கொண்ட தனி நபர்கள் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

இன்றைய சூழலில் ஜனநாயக அரசியலில் சகிப்புத்தன்மை மற்றும் வெறுப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. இது வன்முறைக்கு இட்டுச் செல்கிறது. இந்த சூழலில் தான் மகாத்மா காந்தியின் விழுமியங்களை அதிக ஆர்வத்துடன் நான் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மதசார்பின்மை என்பது மதத்தில் இருந்து அரசாங்கத்தை பிரிப்பதாகும். அதாவது இந்திய அரசாங்கம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவோ அல்லது ஆதரிக்கக் கூடாது. அரசிடம் எந்த மதத்திற்கும் சிறப்பு அந்தஸ்து சலுகைகள் கிடையாது. அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மதச்சார்பின்மை மிக அவசியமானது. இந்தியா கலாச்சார பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனைத்து நம்பிக்கையாளர்களிடமும் அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் நாத்திகம் உள்ளிட்ட அனைத்து சமய நம்பிக்கைகளையும் சமமாக அரசு கருத வேண்டும் ஒருவரது சமயத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ அரசு பாகுபாடு நடந்து கொள்ளக் கூடாது என்பதை நூலாசிரியர் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

காந்தியும் சுற்றுச்சூழலும் எனும் நூல் மூலம் ஏராளமான விஷயங்களை அலசி ஆராய்ந்து நமக்கு வழங்கியுள்ளார் நூலாசிரியர்.

குறிப்பாக காந்தியும் சுற்றுச்சூழலும், காந்தியின் ஜனநாயகம் – சுதந்திரம், காந்தியின் மதசார்பின்மை என மூன்று அத்தியாயங்களை கொண்ட நூல் இது. இன்றைக்கு அதிகம் பேசப்படும் மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவை குறித்து மகாத்மா காந்தி கொண்டிருந்த கருத்துக்கள் என்ன என்பதை இந்த நூலை வாசிப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

உண்மை, ஒழுக்கம், தொண்டு, கல்வி போன்ற அனைத்து வகையிலும் இக்கால மக்களுக்கு இயற்கையின் இயல்பை உணர்த்தி உள்ளது இந்நூல்.

இயந்திரமாக்கல், அறிவியல், வளர்ச்சி, நவீனமாயாக்கல், நாகரிகம், நகரமயமாக்கல் குறித்த காந்தியடிகளின் சரியான அணுகுமுறைகளை நூலாசிரியர் மிக அருமையாக நமக்கு வழங்கியுள்ளார். முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வு நூல் இது என்றால் ஆச்சரியம் இல்லை.

இன்றைய காலத்திற்கு தேவை இந்த நூல் போன்ற பல்வேறு படைப்புகள் அவசியம். அனைவரும் வாசிப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

நூலின் விவரங்கள்:

நூல்: “காந்தியும் சுற்றுச்சூழலும்”
ஆசிரியர்: ப.திருமலை
வெளியீடு: மண் மக்கள் மனிதம் வெளியீடு மதுரை-625016
தொடர்பு எண்: 9865628989.
விலை: ரூ.130

எழுதியவர் : 

✍🏻 MJ. பிரபாகர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *