Don’t judge a book by its cover. Don’t jump to your own conclusions with a mere look at the title. What looks to be an account of the start of a day turns very sensuous as it gets under way.
Reproduced here alongside an English translation by moi with prior permission from the poet is a beautiful Tamil poem by Poet Paalaivana Lanther (The Desert Lantern):
முழங்காலிட்டுக் கூப்பும்போது
முழங்கால் மடக்கி எழும்போது
எழும்போது
போது
விழிக்கூர்ப் பெருகியுடையும் கனா
பாதியில் உடைந்து பாதியாகிப்போன
சதையிலிருந்து
தசைநார் நார்நாராக பிரியும் சப்தம்
வெளிர் மஞ்சளை பிரித்துப் பார்க்க
உற்று உற்று
வயிற்றிலிருந்து நழுவிய
ஆரஞ்சுப் பழமது கடலுக்குள்ளிலிருந்து எழுவதாக நம்பும் சொல்
நீ
மற்றும் நீ
முப்பிறவியின் முனகலென நம்பப்படும் நம்பகமற்றதை நவில்
கேட்கும் காதுகளுக்குள்
கேள்விகளை விதை
அண்டார்டிகாவின் காற்றுக்கு
ஆசிய மரக்கிளையில் தொங்கும் தலையின்
முன்நெற்றி உரோமச் சதிராட்டம்
நீ
மற்றும்
உளறல் ளுவறல்
ஓருயிர்
உருவாகுவதற்கென
உருவாக்குவதற்கென அசைதல் அசைத்தல்
அவள் பச்சைக்கு சிவப்பு வாசம்
WHAT IS THE SMELL OF HER GREEN
While kneeling in prayer,
when bending the knee
and rising,
when getting up.
The sound
of the dream
breaking in the middle
through the wide open eyes
and separating
fibre by fibre
from the flesh
reduced to half.
The word that believes
the orange fruit
that slipped from the stomach
rises from inside the sea
to open and peer
at the pale yellow.
You
and you
declare
what is believed
to be the moans
of the previous birth
as unworthy of trust.
Sow questions
into ears that listen.
The dance of the bangs
on the forehead
of the head
hanging from
an Asian tree
to the winds
from Antarctica.
You
adn
babble labbeb
move
for a life to be created
to move
to create a life
Her green has the smell
of red.

