Paanai seivom Payir Seivom book review by mo pandiyarajan

காஞ்சா ஐலைய்யாவின் “பானை செய்வோம் பயிர் செய்வோம்”

 

சமீபத்தில் ஒரு கதை படித்தேன். குழந்தைகளுக்கான புத்தகம். அழகியை காணவில்லை. அந்த அழகி ஒரு எருமை மாடு. அதற்கு இசை ரொம்ப பிடிக்கும். அதை வளர்த்தவர் காவல் நிலையம் போய் புகார் கொடுப்பார். போலீஸ்காரர் எருமை மாட்டை காணவில்லைன்னு புகாரா? ஒரு கேவளமான பார்வை பார்த்துவிட்டு முடியாது என்று சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு அங்கிருந்த கடைநிலை காவலர் எறுமையை தேடுவார். அவருக்குதான் அதன் அழகியின் அருமை தெரியும்.

கடைநிலை உழைப்பாளிகளின் உழைப்பையும், அறிவையும், அறிவியல் அணுகுமுறையையும், கண்டுபிடிப்பையும் போற்றவேண்டியதை விட்டு அவர்களை கீழானவர்களாக பார்ப்பது என்பது மிக மோசமான சிந்தனை என்பதை பதிவு செய்கிறது இந்த நூல்.

இந்த நூல் எட்டு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்கள் பெரியதாகவும். எளிய நடையிலும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் உள்ளது.

இன்றைய சூழலில் மிக மிக முக்கியமான நூல் இது. இந்நூலை ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு இந்த நூலில் ஒரு பகுதி கீழே வாசிங்க.’ புராணக் கதைகளில் யாதவ இளவரசனாகக் கண்ணன் அறிமுகமாகிறான். பழங்கதைகளிலும் புல்லாங்குழல் வாசித்தவாறு கால்நடைகளை மேய்ப்பவனாக அவன் சித்தரிக்கப்படுகிறான். ஆனாலும் அந்தச் சமூகத்தினரின் அறிவும் திறன்களும் மதிக்கப்படவில்லை. அவர்களுடைய தொழில் பொதுப் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நல்வாழ்வுக்கும் உதவுகிறது. ஆனாலும் கால்நடைகளோடு உறவாடுபவர்கள் என்று அவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள். இன்றும் கூட, யாதவ குலத்தில் பிறந்த லாலு பிரசாத் யாதவ் என்ற அரசியல் வாதி எருமைகளைத் தம் வீட்டில் பராமரித்து வருவதற்காகக் கேலிக்கு உள்ளாகிறார்.

ஆனால் ஓமம் வளர்த்து சாமியார்கள் காலில் விழுவதற்காக அரசியல்வாதிகளை யாரும் கேலி செய்வதில்லை.’

                       

                          நூலின் தகவல்

நூல்                             :  பானை செய்வோம் பயிர் செய்வோம்

 ஆசிரியர்                : காஞ்சா ஐலைய்யா

மொழிபெயர்ப்பு : அருணா ரத்னம்

ஓவியம்                    : துர்காபாய் வ்யாம்

வெளியீடு              :  தூளிகா

விலை                      : ரூ. 65

           

          எழுதியவர் 

  மொ. பாண்டியராஜன்

 

 

 

 

 

 

 

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *