Paasi kulathai thuyilezhuppum thavalai பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை” (ஹைக்கூ தொகுப்பு நூல்)- சாந்தி சரவணன்

 

 

 

72 தோழர்களின் ஒன்று சேர்ந்த ஹைக்கூ தொகுப்பு. பலரின் கற்பனைகளை துயிலெழுப்பும் தவளை. அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சிறப்பு. அவற்றில் சில துளிகள் தேர்தல் சமயத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காற்றில் பறந்து போவது ஒன்றும் நாம் அறிய நிகழ்வு அல்ல. அதை அழகாக காட்சிப்படுத்தும் ஹைக்கூ:

கட்சிக் கொடிகள்
காற்றில் பறக்கின்றன
தேர்தல் வாக்குறுதிகள்
-ரவிஜி ,புதுச்சேரி

வாழ்ந்த வீட்டில் அனைவரோடும் பேசி திரிந்த காலங்கள் எல்லாம் கழிந்து தனிமையை துணையாக கொண்டு இருக்கும் இன்றைய முதியோர் நிலையை எதார்த்தமான நிதர்சனத்தை காட்சிப்படுத்தும் தோழமையின் ஹைக்கூ கவிதை:

யாருமில்லாத வீட்டில்
பேசிக் கொண்டிருக்கும்
அந்தக் கிழவி
       _ கவிதா பிருத்வி ,தஞ்சாவூர்

புன்னகையோடு வளம் வர பணம் மட்டுமே காரணமாக இருக்கலாம் வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தும் ஹைக்கூ கவிதை:

ஏழைச் சிறுமி
பறந்தது வண்ணத்துப் பூச்சி
மலர்ந்தது புன்னகை
 -செ. கலைவாணி-மெல்போர்ன், ஆஸ்திரேலியா

உழைப்பவனுக்கு வியர்வை தான் மிஞ்சும் என்பதை ஆணித்தரமாக காட்சிப்படுத்தும் ஹைக்கூ கவிதை:

வெட்டிய கரும்பின் சாறு
சொட்டுச் சொட்டாய் வடிகிறது
விவசாயியின் வியர்வை
              -சோ. ஸ்ரீதரன்-இலங்கை

உறுப்பு தானத்தை வலியுறுத்தும் ஹைக்கூ கவிதை:

இழந்தவன் கண்கள்
பார்க்கத் தொடங்கின
உறுப்புத் தானம்
           -சோ. கு. செந்தில் குமரன்-புதுச்சேரி

புத்தக தலைப்பு சார்ந்த ஹைக்கூ கவிதை:
திடீர்ப் பாய்ச்சல்
பாசிக்குளத்தைத் துயிலெழுப்பும்
தவளை
         -பெ. விஜயலட்சுமி-காஞ்சிபுரம்

கடற்கரை நிகழ்வை அருமையாக காட்சிப்படுத்தும் நடை கொண்டுள்ளது இந்த ஹைக்கூ:

ஓவியம் தீட்டுவதைக்
கைவிடுவதில்லை
கடற்கரை நண்டுகள்
பொன். தெய்வா-ஐவேலி

அண்டம் தாண்டி வரும் பறவைகளின் எண்ண ஓட்டத்தை காட்சிப்படுத்தும் ஹைக்கூ கவிதை:

ஒற்றை மரம்
காணாமல் போனது
எட்டிப் பார்க்கும் குருவி

      -எ.சீனிவாசவரதன் ,சின்ன காஞ்சிபுரம்

குழந்தைகள் பாசம் தான் பாலமாக குடும்ப உறவுகளை இணைக்கிறது. பகை மறந்து குழந்தைகளுக்காக சேர்ந்த பல குடும்ப உறவுகளை நாம் பார்த்து உள்ளோம். அதை காட்சிப்படுத்தும் ஹைக்கூ:

துள்ளி குதித்தக் குழந்தை
தூக்கி ஏறியப்பட்டது
குடும்பச் சண்டை
            -ரா.வசுமதி ,வேலூர்

என்னுடைய ஹைக்கூ கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த ஹைக்கூ

கரையான் புற்று
குடியேறியது பாம்பு
உழைப்புச் சுரண்டல்
       -திருமதி சாந்தி சரவணன், சென்னை 40

பள்ளி கால நினைவுகளை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ

வேப்பங்காற்று
நினைவை மீட்டும்
மரத்தின் பள்ளி

    -நெல்லை க. சோமசுந்தரம்,சென்னை

காடுகள் எரிந்து போவதால் மரங்களோடு சேர்த்து பறவை பூச்சிகள் என உயிரினங்களும் சேர்ந்து அழிந்து விடுகிறது. அதை காட்சிப்படுத்தும்

எரிந்த காடு
கருக்கட்டல் மரப்பொந்தில்
கீச்சிடும் பறவைக

 -நெல்லை அன்புடன் ஆனந்தி,அமெரிக்கா

கற்பனையின் உச்சம் எனது தோழமையின் ஹைக்கூ:

கடவுள் வரைந்த ஓவியம்
பெரிய காகிதத்தில்
நிலா
          -அ. ஷம்ஷாத்,வடபழனி சென்னை

மனிதர்கள் போல் தான் மற்ற உயிரினங்களும். தாய் பாசம் அனைத்து உயிரினங்களும் பொது. அதை நாம் சற்றேனும் சிந்திக்கின்றோமோ என்றால் இல்லை. இதை காட்சிப்படுத்தும் ஹைக்கூ

பாலுக்கும் கத்தும்
கண்கள் திறக்காத குட்டிகள்
நாய் வண்டியில் தாய்
             -புதுவைத் தமிழ்நெஞ்சன்,புதுச்சேரி

கற்பனை ஒவியம் உயிர் பெறும் ஹைக்கூ

தொட்டி மீன்களை
பிடிக்க முயலும் பூனை
நீர்ப் பட்டு அழியும் ஓவியம்
         -கன்னிக்கோவில் இராஜா,சென்னை

அனைத்து ஹைக்கூ கவிதைகளும் அருமை. அனைத்து படைப்பாளிகளுக்கு ம் எனது மனமார்ந்த வாழ்த்துகள்

நன்றி

திருமதி சாந்தி சரவணன்
சென்னை 40.

புத்தகத்தின் பெயர்: பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை (பன்னாட்டுத் துளிப்பா (ஹைக்கூ) தொகுப்பு நூல்)
தொகுப்பாளர்கள்: புதுவைத் தமிழ்நெஞ்சன்
கன்னிக்கோவில் இராஜா
பக்கங்கள்: 152
விலை: Rs. 180/-
பதிப்பகம்::நூலாசிரியர் பதிப்பகம்

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது  புத்தக  விமர்சனம்,  கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *