காதல் – பாப்லோ நெருடா | தமிழில் தங்கேஸ்
அன்பே !
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு மணி நேரமும்
நீ எனக்காகவே படைக்கப்பட்டவள் என்பதை
உன் இதயத்தில் நீ
இனிமையுடன் உணர்ந்தால்
ஒவ்வொரு நாளும் ஒரு பூ
உன் உதடுகளின் மீது ஏறி வந்து
என்னைத் தேடினால்
ஆ என் அன்பே !, ஆ என் அன்பே !
நீ என்றென்றும் சொந்தம்
என்று எண்ணிக் கொள்
என்றோ என்னுள் எரிந்த
அந்த நெருப்பு
இதோ மீண்டும் எரிய ஆரம்பிக்கிறது
எரிந்து கொண்டேயிருக்கிறது
அன்பே |
இனி எந்நாளும் இந்தத் தீ அணையாது
இந்தக் கணம் என்றுமே
என் வாழ்வை விட்டு அகலாது
என் இதயம் என்றும் உன்னை மறக்காது
நீ இந்தப் புவியில்
உயிர்த்திருக்கும் வரையில்
என் காதல் உன் காதலை
உயிர்பித்துக் கொண்டேயிருக்கும்
தன்னையே அதற்கு ஈந்து
அன்பே, நீ வாழும் வரை.
அது ஒரு பூ மாலை போல
உன் தோள்களை
தழுவிக் கொண்டேயிருக்கும்
அதே நேரம்
அது என்னை விட்டும் என்றுமே
அகன்று போகாது
எழுதியவர் :
✍🏻 மூலம் : பாப்லோ நெருடா
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
