இரசிக்க வேண்டும்
என்கிற எண்ணத்துடன் தான்
வந்தேன் இங்கு ….
ஏனோ,
இரசிப்பின் உச்சம் தடம் மாறி போய்விட்டது போல் ஒரு நினைப்பு….
அப்படித்தான்
சாலையில் அழுத்தமாய் வண்டியோட்டிக் கொண்டிருந்தேன்.
சிறு திருப்பு ….
வெள்ளை உடுத்த முதியாள்
என்னையே பார்த்து முதிர்ந்து நின்றாள்.
எத்தனை வருடத்தையொத்த பார்வை,
அப்படியே மடி தேடினேன்,
ஆனால் …..
அந்த வருடங்களில்
அந்த ஆத்தாவிடம் மடியடங்கி படுத்ததில்லை….
ஆனாலும்
அவள் நினைப்பு இன்றும்
அடங்க வில்லை எனக்குள் …..
எங்கள் கிழவி
காரசாரமானவள்
எப்போது
குதிப்பாள்
எப்போது
அடங்குவாள் …..
என தெரியாது….
அவளின்
பாம்படமும்
முழியும்
பல திருப்பங்களில் பார்த்து
திகைத்துப் போகின்றேன்.
‘பாச்சாத்தா ‘
பாச்சாத்தா கவிதை எழுதியவர்:
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.