ம்.ம்.ம்..எனக்கு எழுத வர மாட்டேங்கிது..மா.னு அழுதுகிட்டே வந்தது சௌசா.
அப்பா ஒட்டகசிவிங்கி மரங்களில் இருந்த கிளைகளை வளைத்து பிடித்தபடி அண்ணன் சாசாவிற்கு சாப்பிட உதவிக் கொண்டு இருந்தார்.
க்கீய்ங், க்கீய்ங் னு ஒரு சத்தத்தோட அழுதாள் சௌசா.
அது என்ன க்கியிங் க்கீயிங்? அப்ப கூட பார்க்க மாட்றீங்களே பா? ன்னா சௌசா.
அப்பா இலைகளை அடுக்கி, எழுத்துஉருவாக்கினார்., மணலில் குட்டி சௌசாவிற்கு பிடித்த மாதிரி எழுதி காண்பித்தார்.
உதிர்ந்த மலர்களை எழுத்துகளாக அடுக்கினார். ரயில் விளையட்டில் எழுத்து நிறுத்தங்களை அமைத்தார்.
சௌசாவிற்கு புது அனுபவமாக இருந்தது. சிக்கு.,புக்கு சிக்கு புக்கு..,அ..ஆ தக்கு முக்கு தக்கு முக்கு., இ ஈ னு இஷ்டத்துக்கு பாடி ஆட ஆரம்பிச்சுட்டா சௌசா.
புள்ளைங்க மனச புரிஞ்சுகிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி பாடம் நடத்துனாரு அப்பா ஒட்டகசிவிங்கி.
என்ன குட்டிஸ், நீங்களும் டீச்சர் அப்படி இருக்கனுமுன்னு தான நினைக்கறீங்க?!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
