பகைநன்று (pagai nanru) – நூல் அறிமுகம்
புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்லும்போது ஒரு புத்தகம் எப்போது இருக்கும் புத்தகத்தின் நீளம், உயரத்தைவிட வித்தியாசமாக புத்தக வரிசையில் இருப்பதை உணர்ந்தேன். அதன் அட்டைப் படமும் முதலை வாயில் ஒரு பெண் அமர்ந்து படிப்பதுபோல் இருந்ததும், புத்தகத்தில் ஏதோ ஒரு வித்தியாசமும் தெரிவதாக நினைத்தேன். உடனடியாக கையில் எடுத்து சில வரிகளை வாசித்த உடன் உடனடியாக வாங்கினேன்.
வாழ்க்கையில் மனிதர்களுக்கு பகைமை என்ற உணர்வு மிகவும் மோசமானது, தன்னுடைய வாழ்க்கையை அழிவு பாதைக்கு செல்லும் அளவுக்கு பகைமை என்ற சிந்தனை அழைத்துச் சென்றிருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகம் பகைநன்று என்று பகைமையைப் பாராட்டிருக்கிறது. அப்படி என்னப் பகைமை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று வாசிக்க ஆரம்பித்தேன்.
மால்கம் என்ற கிராமத்து மாணவன் முடிதிருத்தும் தொழிலாளியின் மகனாகப் பிறக்கிறான். நிலா என்ற தங்கையும் உடன் இருக்கிறாள். ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை முதல் மாணவனாகச் சிறந்து விளங்குகிறான். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் மால்கம் முதல் இடத்திற்கு வர முடியவில்லை. ஆனால் நீட் தேர்வுக்காக படிக்கிறான். அதில் எப்படி வெற்றி பெற்றான் என்பதுதான் கதையின் சுருக்கம்.
மால்கம் ஒன்றாம் வகுப்பில் முதல்நாள் பள்ளிக்குச் செல்லும்போது அங்கு அவனுக்கு ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. அதுதான் வாழ்க்கையில் பகைமையை குட்டி பத்மினி டீச்சரிடம் பெறுகிறான். அதை எப்படி மால்கம் நன்றாக எடுத்து கொள்கிறான் என்பதுதான் புத்தகத்தில் இருக்கிறது.
“இவனுக்கு படிப்பெல்லாம் வராது. இவென்னால்லாம் படித்து கலெக்டராவா வரப் போறவன்” என்று முதல் வகுப்பு ஆசிரியை முதல் நாள் குட்டி பத்மினி டீச்சர் பேசியது புத்தகத்தில் இருக்கிறது.
பத்திரிக்கையாளர் ஒருவர் அகமது ஜமால், தனது தந்தையின் மூலமாக மாஸ்டராக அழைக்கப்பட்டு மால்கத்தோடு தொடர்ந்து பேசி பழகுகிறார். அதன் பிறகு தனியார் பள்ளிக்கு மாஸ்டர் உதவியுடன் மால்கம் சேருகிறான். அங்கு குட்டி பத்மினிக்கும், மால்கமும் பகைமை உணர்வு ஏற்படுகிறது.
“ஸ்டூடண்ட் எதுக்கு வேலை வாங்குறீங்க?” என்று மாஸ்டர் மால்கத்திற்கு ஆதரவாக பள்ளி சென்ற முதல்நாள் குட்டி பத்மினியை பார்த்து கேள்விகளை எழுப்பினார், அதுதான் பேசும் பொருளாக மாறியது.
“சேரிப்பயலால நல்லா படிக்க முடியுமுன்னு நீ காட்டனும்” என்ற வார்த்தையில் பகைமையை வைத்து அதில் புத்தகத்தின் நகர்த்திச் செல்கிறார்.
நந்தனர் புரம் நத்தனன் கோயில் மால்கத்திற்கு பயிற்சி பெறும் இடமாக மாறியது. லீவு நாளில் அப்பாவிற்கு முடித்திருத்தும் தொழில் செய்யும் மால்கம், நீட் தேர்வில் எப்படி முதலிடம் பெறுகிறான், அவனுடைய பகமையை எப்படி வெல்கிறான் என்பதையும் புத்தகம் எளிமையாகவும், வெளிப்படையாக பேசுகிறது.
கடைசியாக குட்டி பத்மினியை பெருமையாக பேசும் மால்கம், அதன் பின்பு சில நாட்கள் கழித்து குட்டிபத்மினி தற்கொலை செய்து கொள்கிறாள். கதை முழுவதும் நேற்று, இன்று, நாளை சமூகம் செல்லும் பாதையில் முடிகிறது.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் அடையும்போது, குட்டிபத்மினி போன்ற நபர்கள் எப்படிபட்ட மோசமான அணுகுமுறையில் இன்னும் இருக்கிறார்கள் என்பதையும் இந்த புத்தகம் விளக்குகிறது. ஆனால் மால்கம் அதில் எப்படி முன்னேறி “டாக்டர் மால்கம்” என அனைவராலும் அழைக்கப்பட்டான் என்பதே புத்தகம் சொல்லும் செய்தி. அந்த வெற்றி என்பது அவனுடைய வெற்றியல்ல, அந்த மக்களின் வெற்றியாகவே இந்த புத்தகத்தில் உள்ளது.
பள்ளிகளிள் சாதி வேறுபாடுகளுக்கு ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்துகிறது. எப்போதெல்லாம் அநீதி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் ஒரு மாஸ்டர் இருந்து கேள்விகளை அழுத்தமாகவும், நேர்மையாகவும் கேட்டு போராடிக் கொண்டே இருப்பார் என்று புத்தகம் கூறுகிறது.
செவ்வணக்கம் “மால்கம்”
தொடர்ந்து போராடு தோழனே, உனக்காக அல்ல, உன்னை போன்ற பகைநன்று தோழனுக்காக, நான் மால்கம் இருக்கிறேன் என்று புத்தகம் வாசிக்கும் போது தோன்றியது.
நூல் அறிமுகம் எழுதியவர் :
நூல் : பகைநன்று (pagai nanru)
ஆசிரியர் : மால்கம்
பக்கங்கள் : 88 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ . 90
நூல்ப் பெற : https://thamizhbooks.com/product/pagai-nanru/
நூல் ஆறுமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.