Kaviyoviyathodar-Yuththa geethangal 17 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 17

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 17 – நா.வே.அருள்



உலகிலேயே சிறந்த கவிதை
********************************************

விவசாயியின் சாபம் மண்ணாலானது
ஆனாலவன் அவ்வளவு லேசில் சபிப்பதில்லை

வெளியே தெரிவதில்லை
எனினும்
விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல
அவன் ரௌத்ரம் பிரம்மாண்டமானது
காட்சிகளின் விதைகளாக இருக்கும் அவனது
கருவிழிகளிலிருந்துதான்
கருணையின் விருட்சங்கள் வேர்விடுகின்றன.

உலகிலேயே சிறந்த நிலப்பரப்பு
விவசாயியின் இதயம்தான்.
அவனது நெற்றியின் தேசியக் கொடியில்தான்
அசோகச் சக்கரங்கள் உருள்கின்றன.
அன்பு ஊற்றெடுக்கும் விவசாயியின் கிணற்றில்
பாசனத்துக்குப் பஞ்சமேயில்லை.

உலகிலேயே மிகச் சிறந்த கவிதை
வயல்களின் தாள்களில் விவசாயி எழுதும்
உழவுதான்.
விவசாயி எழுதும் கவிதைகளைப் படிக்காமலேயே
கிழித்துப் போடுபவன்தான்
உலகிலேயே மோசமான சர்வாதிகாரி.

விவசாயிக்கு
எவ்வளவு பெரிய மலைப்பாம்பும்
ஒரு மண்புழுதான்
ஒரு மண்புழுவைத் தூண்டிலில் செருகும்போது
அவன் விவசாயி அல்ல
மீனவனாகிவிடுகிறான்.

சேறுதான் விவசாயியின் சிம்மாசனம்
புரியாதவர்களுக்கோ
ஒவ்வொன்றையும் உள்ளிழுத்துக் கொள்கிற
உளைக்கும் புதைசேறு
பூமியைப் புரட்டிப்போட வரும் புல்டோசர்களைக் கூட
அது புசித்துவிடும்!

கவிதை – நா வே அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar-Yuththa geethangal 16 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-யுத்த கீதங்கள் 16

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 16 – நா.வே.அருள்



பாவ யாத்திரை
************************
இன்றைய உணவு மேசையில்
நான் எடுத்துக் கொண்ட உணவு கழுத்துக்குக் கீழே
இறங்குவதாயில்லை
ஒருவேளை அது
என் சகோதரனின் கழுத்தைக் கயிறு இறுக்கிக் கொண்டிருக்கிற
காரணத்தால் இருக்கலாம்.

உணவைத் தொண்டைக்குக் கீழே தள்ளுவதற்கு
மிகவும் சிரமமாயிருக்கிறது.
அதுமட்டுமல்ல
குமட்டல் எடுக்கும் மனசை
என்னதான் செய்வேன்?

மனசை
எந்திரத்தின் ஒரு பகுதிபோலத் தனியே
கழற்றி வைக்க முடியாதா?

முந்நூறு விவசாயிகளின் பிணங்களின் மேல்
தேசிய கீதம் பாடிய எனது வாய்க்கு
இன்றைய தண்டனையாகத்தான்
எனது இந்த உண்ணா நோன்பு!

அரசாங்க முத்திரை குத்திய மௌனத்தைப்
பத்திரப்படுத்திக் கொள்ளும்
எனது இருத்தலுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை
நான் இறக்கிறபோது
எனது பல்லக்கை அலங்கரிக்க
இந்த வாழ்க்கையின் அவமானம் தேவைப்படலாம்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 15 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 15 – நா.வே.அருள்

சங்கு…திக்ரி…இந்தியா!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு விவசாயியின் தலைப்பாகை தேசியக் கொடியைப் போலவே புனிதமானது ஏனெனில் அவனது உடல் தன்மானக் கம்பம்! கொடிக்கயிறு… முறுக்கேறிய நடுமுதுகு நரம்பு!! கொடித்துணியோ அவனது உழைப்பைப் போலவே பட்டொளி வீசிப் பறக்கக் கூடியது. அவன் கம்பத்தின் கீழ்தான் அனைவரும்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 14 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 14 – நா.வே.அருள்

நுகத்தடி ************ அரசின் ஏவலாளிகள் ஒரு செங்கோல் செய்து வைத்திருக்கிறார்கள் கரடு முரடானதும் முட்டாள்தனமானதும், மூர்க்கத் தனமானதும் உயிர் எடுக்கும் உன்மத்தம் கொண்டதுமான செங்கோலில் ராஜதந்திர முலாம். அதில் ஒட்டியிருக்கும் பல உயிர்களின் துள்ளலும் துடிப்பும் சதைத் துணுக்குகளும் ரத்தக் கறைகளும்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 13 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 13 – நா.வே.அருள்

கல்லறைக்காரன் ************************** ஒரு கல்லறைக்காரனிடமிருந்து தப்பிப்பதுதான் அவ்வளவு கடினம். அவன் உயிர்களுக்கு விலை குறிப்பவனாக இருக்கிறான். அவன் வார்த்தைகளில் பிசின் தடவுகிறான். விதைக்காமலே அறுவடை செய்கிறவனை விவசாயியாக அறிவிக்கிறான். ஒரு புல்டோசரைவிட மோசமான அவனது நாக்கு எத்தனை உயிர்களைப் புரட்டிப் போட்டுவிடுகிறது!…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 12 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 12 – நா.வே.அருள்

எல்லை காந்திகள் *********************** அவமானப்படுத்தப்பட்ட விவசாயி எல்லையின் வாசலில் உடையணிந்த எலும்புக் கூடாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனது அழுக்கடைந்த தலைப்பாகைதான் உலகத்திற்காகத் துடிக்கும் வெளிறிப் போன இதயம். அவனது பஞ்சடைந்த கண்களின் இமைகள் பசியின் சிறகுகள் அதிகாரம் அவனை கோலிக் குண்டு…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 11 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 11 – நா.வே.அருள்

வயல் முகம் *************** இந்தியாவின் வரைபடம் விவசாயி முகம்! அனைத்துக் கரும்புள்ளி செம்புள்ளிகளும் காவி நிறமாகக் காட்சியளிக்கின்றன. அதிகாரத்தின் கண்ணாடியில் முகம் பார்க்க முடியவில்லை. நிலம் அவனது மூளை நிலம் அவனது நிணம் நிலம் அவனது உயிர் நிலம் அவனது உடல்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்

எனது வசியம் ***************** உன்னைப் பற்றித்தான் முதல் கவிதை எழுதுவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை நீயொரு தொலைதூர தேவதை அருகில் கூட வரமுடியாத அந்தகாரத்தில் நான் இருந்தும் உன்னைக் காதலிக்கிறேன் ஒரு விவசாயி மண்ணைக் காதலிப்பதுபோல நான் உன்னைக் காதலிக்கிறேன். என்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 9 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 9 – நா.வே.அருள்

குருஷேத்திரம் ********************* நமது முனகல்கள் தொந்தரவுப் படுத்தக்கூடியவை ஆயினும் செவிட்டுக் கரப்பான் பூச்சிகளின் செவிகள் பழுதுபட்டுவிட்டன கலப்பைச் சிலுவையில் அறையப்பட்டவர்கள் கம்பீரமானவர்கள் சவப் பெட்டிகளுடன் காத்திருப்பவர்கள் பிணவறையின் காப்பாளர்கள் விறைத்துப் போன கள்ள மௌனத்தின் தொளதொளப்பு ஆடைகளில் அதிகார போதை நெடியடிக்கிறது…